[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷ் படுகாயம்?

keerthi-suresh-injured-while-shooting

படப்பிடிப்பின் போது சறுக்கி விழுந்து கீர்த்தி சுரேஷ்க்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக மாறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் கீர்த்தி சுரேஷ் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியானது. இதற்கான காரணம் , சமூக வலைத்தளங்களில் வேகமாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் படப்பிடிப்பில் இருக்கும் பெண் ஒருவர் சரிக்கி விழுந்து விடுகிறார். உடனடியாக அங்கிருப்பவர்கள் அவரை தூக்கச் செல்கின்றனர். வழுக்கி விழுபவர் கீர்த்தி
சுரேஷ் முகச்சாயலில் இருக்கிறார். எனவே கீர்த்தி சுரேஷூக்கு தான் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுவிட்டதாக செய்தி பரவுகிறது. ஆனால் இதுதொடர்பாக கீர்த்தி சுரேஷின் நெருங்கிய வட்டாரம், வீடியோவில் இருப்பது அவர் இல்லை என தெரிவித்துள்ளனர். மேலும் கீர்த்தி நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close