[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

சிவகார்த்திகேயனை புகழ்ந்த பஹத் பாசில்! குஷியில் சிவகார்த்திகேயன்...

sivakarthikeyan-fahadh-faasil

தனியொருவன் படத்தை இயக்கிய மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் இணைந்து நடிக்கவுள்ளார். இது தொடர்பாக பஹத் பாசில் கூறுகையில், தமிழ்ப் படங்கள் மீது எனக்கு அலாதி ப்ரியம் உண்டு.அதிலும் ‘தனி ஒருவன்’ படம் பார்த்த பின்னர் நான் என்னையே மறந்து விட்டேன் என்று கூறலாம். நேர்த்தியான இயக்கம், அருமையான காட்சி அமைப்பு என்று ஒருங்கிணைக்கப் பெற்ற இயக்குநர் மோகன் ராஜாவின் உழைப்பு என்னைப் பொறுத்த வரை மேல் நாட்டு இயக்குநர்களுக்கு நிகரானது எனக் கூறுவேன். இப்பொழுது அவர் படத்தின் மூலம் நான் தமிழுக்கு அறிமுகமாவது எனக்கு மட்டற்ற பெருமை. மிகக் குறுகியக் காலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன் உடன் நடிப்பது மிகவும் சவாலானதும் கூட. என்னுடைய கதாபாத்திரம் தமிழ்த் திரை உலகில் நீங்கா இடம் பிடித்து நீடிக்க உதவும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

;இதுகுறித்து டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளநடிகர் சிவகார்த்திகேயன், மிகச்சிறந்த ஒரு நடிகரிடம் இருந்து இந்த பாராட்டை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. பாசிலுடன் இணைந்து நடிப்பதை பெருமையாக கருதுகிறேன். அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close