[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

விஜய் அண்ணா நீங்கள் இல்லாமல் நான் இல்லை: ஜெய் நெகிழ்ச்சி 

completion-of-15years-in-my-cinema-career-jai

விஜய் நடித்த பகவதி படத்தில்தான் நடிகர் ஜெய்யின் திரைப்பயணம் ஆரம்பமானது. திரைவாழ்க்கையில் பதினைந்து வருடங்கள் முடிந்ததை நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருக்கிறார் ஜெய்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “பதினைந்து வருடங்களை நிறைவு செய்திருக்கிறேன். இன்னும் போக வேண்டியது உள்ளது. உங்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியம் இல்லை. உங்களின் ஆதரவுக்காக ஒவ்வொருவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.  விஜய் அண்ணா உங்களோடு சேர்ந்து வேலை செய்தது பெரிய வாய்ப்பு.என்னை நம்பியதற்கும் வாய்ப்பை கொடுத்ததற்கும் மிக்க நன்றி. நீங்கள் இல்லை என்றால் நான் இந்த இடத்தில் இருந்திருக்க முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ‘பகவதி’ படத்தில் விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தையும் அவரோடு பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தையும் ஜெய் பதிவேற்றி இருக்கிறார்.

 ’பகவதி’  படம் 04.11.2002 அன்று வெளியானது. அந்தப் படத்தின் விஜய்யின் தம்பியாக ஜெய் நடித்திருந்தார். அதன் பிறகு தனியாக படங்களில் நடிக்க ஆரம்பித்த ஜெய் ‘சென்னை28’,   ‘சுப்புரமணியபுரம்’ படங்களுக்கு பிறகு ஹீரோவாக களம் இறங்கினார். ‘வாமணன்’, ‘எங்கேயும் எப்போதும்’ , ‘ராஜாராணி’ என அவரது சினிமா வாழ்க்கை பெரிய அளவுக்கு முன்னேறியது. கார்ரேஸ், விதவிதமான கார்களை வாங்குவது என அஜித் பாதையை பின்பற்றி வந்தார் ஜெய். சமீபத்தில் குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கில் தனது ஓட்டுனர் உரிமைத்தை இழந்தார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close