[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
  • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
  • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
  • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
  • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
  • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
  • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
  • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
சினிமா 03 Nov, 2017 04:56 PM

இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி ரூபாய் வரி கட்டியுள்ளேன்: அமலாபால் விளக்கம்

actress-amala-paul-statement

இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி ரூபாய் வரி கட்டியுள்ளேன் என்றும் இந்திய பிரஜையாக நான் எந்த மாநிலத்திலும் சொத்துக்கள் வாங்கலாம் என்றும் அமலா பால் விளக்கம் அளித்துள்ளார்.

அமலா பால் தனது புதிய சொகுசு காரை புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அதனால் வரி ஏய்ப்பு நடந்து உள்ளதாகவும் ஒரு மலையாள பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அதை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உடனடியாக வழக்குப்பதியப்படும் என்று அறிவித்திருந்தார். பிறகு புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் எந்த முறைகேடு நடைப்பெறவில்லை என தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து அமலாபால் மெளனமாகவே இருந்து வந்தார். அவரது இன்ஸ்ட்ராகிராமில் ஜாடைமாடையாக ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார். 
இந்நிலையில் அவர் முதன்முறையாக இந்தக் குற்றச்சாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். அது சம்பந்தமாக அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 
தேசிய கொள்கைகளை முன் நிறுத்தி, மலபார் பகுதியின் சுதந்திர போராட்ட வீரர்களால் உருவமைக்கப்பட்ட ஒரு பாரம்பரியமிக்க தின பத்திரிக்கை, பொது மக்களின் பார்வையை தன பக்கம் ஈர்க்கவும், தன்னுடைய பத்திரிக்கை விற்பனையை அதிகரித்து கொள்ளவும், இத்தகைய மேம்போக்கான வழிகளை கையாண்டிருப்பது என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 
சட்டத்தை மதிக்கும் இந்திய பிரஜையான நான், நடப்பு ஆண்டில் ரூ.1 கோடிக்கும் மேலாக வரி செலுத்திய பின்னும், அதுவும் தற்பொழுது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த ஒரு முறைகேடும் கண்டறியப்படாத நிலையில், என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் குறிவைத்து பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளாலும் ஏற்படும் துன்புறுத்தல்களுக்கும் எதிராக, நான் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ஒரு இந்திய பிரஜையாக நான், இந்தியா முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை பார்க்கவும், சொத்துகள் வாங்கவும் உரிமை இருக்கிறது. தாய்நாடு என்பதற்குரிய உண்மையான அர்த்தத்தை தொலைத்துவிட்டு சிலர் பிராந்தியவாத பிரிவினைகளை முன்னிறுத்தி வருவதால், இங்குள்ள வாசகர்கள் தன் மாநிலம் தனிமைப்படுத்தபட்டது போன்ற ஒரு மாயையான சிந்தனைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சம அளவில் தமிழ் சினிமாவிலும் மலையாள சினிமாவிலும் பணியாற்றியுள்ள நான், இவ்விரு மாநிலங்களிலும் என் வருமானத்தையும் சொத்துகளையும் நியாயபடுத்த இத்தகைய ஞானிகளிடமே உதவி கேட்கலாம் என்றுள்ளேன். ஒரு வேளை நான் தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கும் அல்லது பெங்களூருவில் ஒரு சொத்து வாங்குவதற்கும் இவர்களது ஒப்புதல் தேவைப்படுமோ? பெங்களூரிலும் இந்திய ரூபாய்தான் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

இத்தகைய ஞானிகளுக்கு எழுபது ஆண்டுளில், நமது நாடு கடந்து வந்த பாதை மறந்து போய்விட்டது போலும். இறுதியாக, வேற்றுமையில் ஒற்றுமையை காண்கின்ற இந்த நேரத்தில், அதுவும் தற்போதைய இந்திய அரசு, ஒரு நாடு ஒரே வரி என்று ஒன்றுபட்ட வரிவிதிப்பை அமல்படுத்திய பிறகும் கூட, பொது மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையிலும், ஒற்றுமையை குலைக்கும் நோக்குடனும் முன்வைக்கும் பிரிவினைவாத வாதங்களை உடனடியாக நிறுத்தும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். வருங்காலத்தில் நாம் அனைவரும் மலையாளி, தமிழர், பஞ்சாபி, குஜராத்தி என்கின்ற பாகுபாடுகளை களைந்து, ஒரு இந்தியராக அதன் இறையாண்மைக்கும் வளர்ச்சிக்கும்  பலம் சேர்க்கிற வகையில் வலம் வருவோம் என உண்மையாக, உறுதியாக நம்புகிறேன்.
குறுகிய நோக்கில் சின்ன சின்ன ஆதாயங்களுக்காக, சட்ட-திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிற இந்தியர்களுக்கு தொல்லை கொடுப்பதை தவிர்த்து, நாம் நம்மை எதிர்நோக்கியுள்ள வறுமை, ஊழல், கல்வியறிவின்மை, அநீதி, போன்ற சமூக ஏற்ற தாழ்வுகளை களைய போராடுவோம்.அதுவே சிறந்த போராட்டமாகும் என அமலாபால் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close