[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

முழுக்க காடுகளில் படமான ’மரகதக்காடு’

maragatha-kaadu-filmed-thoroughly-in-the-forest

முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட படமாக  'மரகதக்காடு' உருவாகியுள்ளது.

அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி. மோகன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை, மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார்.

படம் பற்றி மங்களேஷ்வரன் பேசும்போது, ‘அழிந்துவரும் காடு பற்றி, பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம். காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய, காடு அழிக்கப்படும் அநீதி பற்றி  படம் பேசுகிறது. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை. இதுவரை கேமரா நுழையாத இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படம் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று கருத்தைச் சொல்லும். அதே போல காடு எவ்வளவு அழகானது என்று ரசிக்கவும் நேசிக்கவும் வைக்கும்படி அழகுணர்வோடு எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் பிரமிக்க வைக்கும். நட்சத்திர பிரகாஷ், ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெய் பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணி நடைபெற்று வருகிறது’ என்றார்.

Advertisement:
Related Tags : Maragatha kaaduForestManagaleswaranR R Films
Advertisement:
Advertisement:
[X] Close