[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

பேய் படங்களின் அடுத்த கட்டம் ‘அவள்’: சித்தார்த்

siddharth-about-aval-film

இயக்குனர் மிலிந்த் ரவ் ‘அவள்’ படத்தின் மூலம் பேய் படங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் நடிப்பில், இயக்குனர் மிலிந்த் ரவ் இயக்கத்தில் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகவுள்ள பேய்ப்படம் ‘அவள்’. இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நரம்பியல் வல்லுநராக சித்தார்த் நடித்துள்ளார் எனத் தெரிகிறது. இப்படத்தை ‘வியாகாம்18 மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, நடிகர் சித்தார்த் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஏடாகி எண்டர்டையின்மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார். ஏற்கனவே வெளியாகியுள்ள ‘அவள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர், டிரைய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதுள்ளன.

இந்நிலையில் ‘அவள்’ படத்தின் மூலம் பேய் படங்களை அடுத்த கட்டத்திற்கு மிலிந்த ரவ் அழைத்துச் சென்றுள்ளார் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சித்தார்த், பயத்தை அனுபவிக்க தயாராக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close