[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

புதிய கட்டணத்தில் சினிமா டிக்கெட் விற்பனை: மெர்சலுக்காக குவிந்த ரசிகர்கள்

mersal-movie-started-selling-cinema-ticket-with-new-rates

புதிய கட்டணத்தின் படி சென்னையில் சினிமா டிக்கெட் விற்பனை தொடங்கியது.

விஜய்-யின் மெர்சல் படத்திற்கு, புதிய கட்டணத்தின்படி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. சென்னை ரோகிணி திரையரங்கில், வரும் 19, 20, 21 ஆகிய தேதிகளுக்கான மெர்சல் படத்தின் டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது. ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி ஆகியவற்றை சேர்த்து ஒரு டிக்கெட் 204 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட்டில் நன்கொடை எனக்குறிப்பிட்டு ஒரு ரூபாயும் பெறப்படுகிறது.‌ இணையத‌ளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய கூடுதலாக 35 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. எனினும் தீபாவளி தினத்திற்கான டிக்கெட் விற்பனை இன்னும் தொடங்கப்படவில்லை.

கடந்த 25 ஆண்டுகளாக முறைப்படுத்தப்படாத திரையரங்குக் கட்டணம் தற்போது முறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் இனிமேல் விழாக்காலங்கள் உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் அதிகக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற நிலை உருவாகியுள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close