[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,039 கன அடியில் இருந்து 1,576 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
 • BREAKING-NEWS கொளத்தூர் நகைகடை கொள்ளையர்களை ராஜஸ்தானில் பிடிக்க முயன்றபோது காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS ஈரான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் நில நடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
 • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 13வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS எதிர்காலத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க இந்த தண்டனை உதவும்- பாலபாரதி
 • BREAKING-NEWS உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோர் விடுதலை
 • BREAKING-NEWS உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு தூக்கு தண்டனை
 • BREAKING-NEWS உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு- 6 பேருக்கு தூக்கு
 • BREAKING-NEWS முழு உடல்நலன், மன நிறைவுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என ரஜினிகாந்திற்கு வைகோ வாழ்த்து
 • BREAKING-NEWS ஒகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய கன்னியாகுமரிக்கு இன்று செல்கிறார் முதலமைச்சர்
 • BREAKING-NEWS நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையால் கைது
 • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
 • BREAKING-NEWS கடல்சீற்றம் தணிந்ததால் நாகையில் 53 கிராம மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்
சினிமா 12 Oct, 2017 10:38 PM

சிக்கலில் சிக்கினார் ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர்

trouble-for-oscar-winner-producer-harvey-weinstein

பாலியல் புகார் சர்ச்சையில் சிக்கியுள்ள ஹார்வி வெய்ன்ஸ்டீன் ஆஸ்கர் விருது பெற்றவர்.

பல்ப் ஃபிக்‌ஷன், கிளர்க்ஸ், உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்து ஹாலிவுட் திரையுலகில் தனக்கென தனி முத்திரை
பதித்தவர் ஹார்வி வெயின்ஸ்டீன். 65 வயதான இவர் கடந்த 30 ஆண்டுகளாக ஹாலிவுட்டில் செல்வாக்குப் பெற்ற பிரபலமாக
திகழ்ந்து வருகிறார். தயாரிப்பாளர், இயக்குந‌ர் என பல முகங்களை கொண்டவர். 1999 ஆம் ஆண்டு இவர் தயாரித்த ஷேக்ஸ்பியர் இன்
லவ் என்ற திரைப்படத்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டதும், வெயின்ஸ்டீனின் புகழ் உச்சியை தொட்டது. இதனால் திரையுலகில்
பெரிய ஜாம்பவானாக வலம் வந்தார். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்ததன் மூலம், அரசியல்வாதிகள் மத்தியிலும் அதிகமாக
பேசப்பட்டார்.

இந்தச் சூழலில் கடந்த வாரம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட ஒரு செய்தி, அவரது ஒட்டுமொத்த செல்வாக்கையும்
அப்படியே புரட்டி போட்டுவிட்டது. திரையுலகில் பல்வேறு கனவுகளுடன் காலடி எடுத்து வைக்கும் பல இளம் நடிகைகளை கடந்த 30
ஆண்டுகளுக்கும் மேலாக சீரழித்தவர் என்ற செய்தியை அந்த பத்திரிகை வெளியிட்டதும், இதுவரை மவுனமாக இருந்த பாதிக்கப்பட்ட
நடிகைகள், அவருக்கு எதிராக அடுக்கடுக்கான பாலியல் புகார்களை தெரிவிக்கத் தொடங்கியுள்ள‌னர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close