[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

ஓவியாவுக்காக வருத்தப்படும் ரைசா 

big-boss-raiza-interviews

பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் ஓவியாவை டார்கெட் செய்ததை பார்த்து எனக்குக் கோபம் கோபமாக வந்தது என்று ரைசா தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகி ரைசா வில்சன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். ஓவியாவை போலவே ரைசாவுக்கும் ட்விட்டரில் தனியாக ஒரு ஆர்மி செயல்படுகிறது. 
இந்நிலையில் பிக் பாஸ் அனுபவம் பற்றி அவர் இப்போது பேசியிருகிறார். அதில் நான் ஊட்டியில் படித்தவள். ஆகவே எனக்கு தமிழ் தெரியும். இப்போது முன்பைவிட நன்றாக தமிழ் தெரியும். பேஷன் கோரியோகிராபர் அஜித் மேனன் சொல்லிதான் இந்த நிகழ்ச்சிக்குள் வந்தேன். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஓவியாவுடன் நட்பானேன். ஆனால் அது கொஞ்ச நாள்தான் நீடித்தது. பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தோம். நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது யாருடனும் பெரிதாக சண்டை போடவில்லை. அனைவரும் ஓவியாவை டார்கெட் செய்தபோது எனக்கு அவரை பார்த்து பரிதாபமாக இருந்தது, மற்றவர்கள் மீது கோபம் வந்தது என்று கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close