[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு வந்தார் கருணாநிதி
 • BREAKING-NEWS கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்: ஓவியா
 • BREAKING-NEWS ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசிய அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
 • BREAKING-NEWS நிலவேம்பு குடிநீர் குறித்து பேசுவதற்கு கமல் மருத்துவரோ, விஞ்ஞானியோ கிடையாது: கடம்பூர் ராஜூ
 • BREAKING-NEWS டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை: சுகாதாரத்துறை செயலர்
 • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி
 • BREAKING-NEWS ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு
 • BREAKING-NEWS நிலவேம்பு கசாயம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலுக்கு அரசு சித்த மருத்துவர்கள் கண்டனம்
 • BREAKING-NEWS 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் முழுவதும் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS தீபாவளி டாஸ்மாக் மது விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20%குறைந்தது
 • BREAKING-NEWS வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காகவே நிலவேம்பு கசாயம் குறித்து கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார்: இல.கணேசன்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும்: தமிழிசை
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீரில் காலை 6.40 மணியளவில் நில அதிர்வு- ரிக்டர் அளவு கோலில் 4.7ஆக பதிவு
 • BREAKING-NEWS தஞ்சை மாவட்டத்தில் 34 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆட்சியர் அண்ணாதுரை
சினிமா 05 Oct, 2017 04:47 PM

நாளை கோவாவில் நாகசைதன்யா சமந்தா திருமணம்

tomorrow-naga-chaitanya-samantha-wedding

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சமந்தாவிற்கும் நாளை கோவாவில் திருமணம் நடைபெறுகிறது. இந்தத் திருமணத்துக்கு 150 பேருக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மறைந்த தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவின் மகன் நாகார்ஜுனா. இவரது மகன்தான் நாகசைதன்யா. இவரும் சமந்தாவும் காதலித்து வருவதாக செய்திகள் வலம் வந்தன. ஆனால் இருவரும் இதை குறித்து பேசாமல் அமைதியாகவே இருந்து வந்தனர். ‘ஏம் மாய சேஸாவே’ படத்தில் நடித்ததன் மூலம் இருவருக்குள் அறிமுகம்  காலப் போக்கில் காதலானது. அதன் பின் இருவரும் பொது நிகழ்ச்சிகளுக்கு சேர்ந்தே வலம் வர தொடங்கினர். தெலுங்கு மீடியாகள் செய்திகளை வெளியிட ஆரம்பித்த பிறகு சமந்தா அரசல்புரசலாக சைதன்யாவை குறிப்பிட்டு பேட்டிகள் கொடுத்தார். இரு வீட்டாரின் சம்மதம் கிடைத்த பிறகு வெளிப்படையாக பேசுகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

இதை தொடர்ந்து நாகார்ஜூனா இவர்களது காதலுக்கும் சம்மதம் தெரிவித்திருந்தார். பிள்ளைகள் யாரை விரும்புகிறார்களோ அவரை திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன் என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தத்திற்கு சைதன்யா சமந்தாவுக்கு பரிசளித்த புடவை மிகவும் பேசப்பட்டது. இந்த ஜோடி எங்கெல்லாம் சந்தித்து செல்ஃபி எடுத்து கொண்டதோ அந்தப் படங்களை எல்லாம் புடவையில் பிரிண்ட் செய்து வழங்கியிருந்தார்.

இந்நிலையில் இவர்களது திருமணம் நாளை கோவாவில் இந்து முறைப்படியும், மறுநாள் 7-ம் தேதி கிறிஸ்தவ முறைப்படியும் நடைபெற உள்ளது. இந்த திருமணத்துக்காக நடிகர் நாகார்ஜுனா, அவரது மனைவி நடிகை அமலா மற்றும் இவர்களது நெருங்கிய உறவினர்கள் கோவா சென்று அங்கு திருமண ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 150 பேரை மட்டுமே அழைத்துள்ளதாக  நாகார்ஜுனா கூறியிருந்தார்.

கோவாவில் பிரபலமான டபிள்யூ நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெறுகிறது. அதன்பின் ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. இதற்காக ரூ.10 கோடி வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுது. இந்தச் செலவை செலவை சமந்தா மற்றும் நாகசைதன்யா ஏற்றுக் கொள்கிறார்கள்.

இந்த டபிள்யூ ஹோட்டலில் ஒரு அறைக்கான தினசரி கட்டணம் ரூ.16 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை என கூறப்படுகிறது.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close