[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

கலகலப்பு 2 வில் மீண்டும் சிவா

kalakalappu-2-again-siva

சுந்தர்.சி  இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு  வெளிவந்து வெற்றி பெற்ற கலகலப்பு படத்தின் 2 பாகத்தில் நடிகர் மிர்ச்சி சிவா மீண்டும் இணைந்திருக்கிறார். 

’சங்கமித்ரா’ என்ற பிரம்மாண்ட படத்திற்கு முன்பு ’கலகலப்பு’ படத்தின் 2 பாகத்தை எடுக்க முடுவு செய்துள்ளார் இயக்குநர் சுந்தர்.சி. இதற்கான நடிகர் - நடிகைகள் தேர்வு முடிந்து இறுதியாக நடிகர் ஜெய், ஜீவா, நிக்கி கல்ராணி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. 

இந்தப் பூஜையில் ரோபோ சங்கர், பிக் பாஸ் வையாபுரி, மனோபாலா உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். அவர்களுடன் கலகலப்பு படத்தின் முதல் பாகத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த மிர்ச்சி சிவாவும் கலந்து கொண்டுள்ளார். மேலும் இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா நடிப்பதை பற்றி எந்த வித தகவலும் வெளிவராத நிலையில் தற்போது சிவா இணைந்திருப்பது ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ”நான் கலகலப்பு 2 - வில் இணைந்திருக்கேன்.. உங்கள் வாழ்த்துக்கள் தேவை”  என்று சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சுந்தர்.சி யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் கலகலப்பு -2 படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close