[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சென்னையில் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு வைகோ பாராட்டு
 • BREAKING-NEWS மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம்: கமல்ஹாசன்
 • BREAKING-NEWS அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை: மண்டல தணிக்கைக்குழு அதிகாரி
 • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
 • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
 • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
 • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
 • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
 • BREAKING-NEWS நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்: திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: ஹெச். ராஜா
 • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
 • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
சினிமா 03 Oct, 2017 04:16 PM

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் ஆரி புகார்  

actor-aari-complaints-at-chennai-commissioner-office

தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் வாயிலாக பணம் பறிக்கும் நபர் மீது நடவடிக்கை கோரி நடிகர் ஆரி சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இயக்குநர் ஜெகதீஷ் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இங்கிலீஷ் படத்தின் இசையமைப்பாளர் எம் சி ரிக்கோ என்பவர் புதியதாக எடுக்க உள்ள படத்தில் நான் நடிக்க உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார். அந்தப் படத்திற்கு துணை நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேவை என போலியாக விளம்பரப்படுத்தி உள்ளார். அந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை. அந்த விளம்பரம் தவறானது. மேலும் அவர் வாய்ப்பு தேடி வருபவர்களிடம் பணத்தை பறித்தும், துணை நடிகைகளிடம் தவறாக பேசி வருவதாகவும் எனக்கு தெரிய வந்துள்ளது.  இந்த நபர் மீது உடனடியாக  நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகர் சங்கத்திலும், இயக்குநர் சங்கத்திலும் ஏற்கெனவே புகார் அளித்துள்ளேன் என்று புகாரில் ஆரி தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில் ஆரியின் புகார் குறித்து இங்கிலீஷ் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர் குறிப்பிடும் நபருக்கும் தங்களுக்கும்  எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர்களும் மறுத்துள்ளனர். 

இதற்கு பதிலளித்துள்ள ஆரி, 'ஜெகதீஷ்' என்பவர் முகப்புத்தகத்தில் போட்டு இருந்த பதிவை மட்டுமே நான் நகல் எடுத்து ஊடக நண்பர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் தகவல் அளித்தேன்.. ஜெகதீஷ் என்பவர் 'இங்கிலிஷ் படம்' என்கிற தமிழ்  திரைப்படத்தின் போஸ்ட்டரை பயன்படுத்தி பதிவு போட்டு இருந்ததால் 'இங்கிலிஷ் படம்' போஸ்டரை ஆதாரத்திற்காக மட்டுமே காண்பித்தேன். மற்றபடி  'இங்கிலிஷ் படம்'  படத்தில் நான் நடிக்கவில்லை. அந்தப் படத்தின் இயக்குனர் மற்றும்  தயாரிப்பாளர்  உட்பட யாருக்கும், எவ்வகையிலும் இந்தப் புகாரில் தொடர்பில்லை. இது குறித்து என் பெயரையும், 'இங்கிலிஷ் படம்' படத்தின் பெயரையும் தவறாக பயன்படுத்தி பொய்யான விளம்பரம் செய்த 'ஜெகதீஷ்' என்பவர் மீதே இந்த புகார் கொடுக்கப்பட்டது என்று தனது தரப்புக்கான விளக்கத்தை கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close