[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
 • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
 • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
சினிமா 02 Oct, 2017 04:41 PM

‘சோலோ’ என் வாழ்நாளில் மிகப்பெரிய படம்: துல்கர் சல்மான் மகிழ்ச்சி

cast-of-solo-makes-it-a-diverse-film-dulquer-salmaan

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான், ஆர்த்தி வெங்கடேஷ், சாய் தன்ஷிகா, நேகா ஷர்மா, ஸ்ருதி ஹரிஹரன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சோலோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பல எதிர்பார்ப்புக்கு இடையில் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இதில் நாயகனாக நடிக்கும் துல்கர் சல்மான் மம்முட்டியின் மகன். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ மற்றும் ‘வாயை மூடி பேசவும்’ படங்களில் நடித்தவர். இந்நிலையில் அவர் தற்போது நடித்து வரும் ‘சோலோ’ படத்தைப் பற்றிப் பேசிய துல்கர், “பிஜாய் என்னை தேர்ந்தெடுத்தது பெரிய விஷயம். அதற்கு நான்தான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் பாப்புலரான டைரக்டர். என்னை ஹீரோவாக போடாமல் அவர் யாரை வேண்டுமானாலும் போட்டிருக்க முடியும். அவர் அழைத்தால் யார் வேண்டுமானாலும் உடனே வருவார்கள். அவர் என்னை தேடி வந்தது மகிழ்ச்சி. அவரோடு வேலை செய்தது பெரிய அனுபவம். என் வாழ்நாள் முழுக்க பயன் தரக்கூடிய அனுபவம்” என்றார்.

மேலும், “என்னை நான் வளர்த்து கொள்வதற்கு நிறைய பயனுள்ள விஷயங்களை அவர் எனக்கு கற்று தந்திருக்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் ஷூட் பண்ணுவது எளிதான காரியம் இல்லை. சின்ன தொந்தரவும் இல்லாமல் வேலைகளை முடித்திருகிறார். என் சினிமா வாழ்நாளிலேயே பெரிய அளவில் வெளியாக போகும் படம் இது. ஒரே நேரத்தில் நடக்கும் நான்கு கதைகளை இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கலாம். இந்தக் கதையில் நிலம், நீர், காற்று, நெருப்பு என நான்கு கோணங்களில் கதையை சொல்லி இருக்கிறார் பிஜாய்” என்று துல்கர் சல்மான் கூறினார்.

இதற்குமுன் தமிழில் டேவிட் என்ற படத்தை இயக்கியவர் பிஜாய் நம்பியார். அதில் விக்ரம், ஜீவா ஆகியோர் நடித்திருந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close