[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காட்டுத்தீ ஏற்பட்ட குரங்கணி வனப்பகுதியில் விசாரணை அதிகாரி அதுல்யா மிஸ்ரா ஆய்வை தொடங்கினார்
  • BREAKING-NEWS புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS 2ஜி வழக்கின் தீர்ப்பு திராவிட இயக்கத்திற்கு கிடைத்த விடுதலை - ஸ்டாலின்
  • BREAKING-NEWS அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு சசிகலாதான் பொதுச்செயலாளர் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS திராவிட இயக்கத்தின் கல்லீரல் போன்று வேலை செய்து வருகிறார் மு.க.ஸ்டாலின் - கவிஞர் வைரமுத்து
  • BREAKING-NEWS தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா மார்ச் 23இல் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியத்திற்கான உறுதியை மத்திய அரசு தரும் வரை நாடாளுமன்றத்தில் போராடுவோம் - தம்பிதுரை

அர்ஜூன் ரெட்டி ரீமேக்: விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகம்

chiyaan-vikram-s-son-dhruv-to-debut-with-arjun-reddy-tamil-remake

அர்ஜூன் ரெட்டி ரீமேக்கில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார் என்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்ட்ராகிராமில் நடிகர் விக்ரம் அறிவித்திருக்கிறார்.

நடிகர் விக்ரம் 10 எண்றதுக்குள்ள படப்பிடிப்பில் இருக்கும்போது அவரது மகன் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது. அப்போது இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அவர் படித்து கொண்டு இருக்கிறார். இப்போதைக்கு அதான் முக்கியம். ஆனால் அவர் சினிமாவுக்கு வர வேண்டாம் என்று நான் தடுக்க மாட்டேன். அவருக்கு என்ன விருப்பமோ அதை அவர் செய்யலாம். இப்போதைக்கு அவருக்கு போட்டோகிராஃபியில் ஈடுபாடு அதிகமாக உள்ளது. அதற்காக நான் ஒரு கேமரா வாங்கி கொடுத்துள்ளேன். அதை வைத்து எனக்கே புகைப்படம் எடுக்க கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறார்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது ‘அர்ஜூன் ரெட்டி’ ரீமேக்கில் துருவ் நாயகனாக அறிமுகமாக உள்ளதாக கூறியிருக்கிறார் விக்ரம். தெலுங்கில் இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார். அந்த ரோலைதான் துருவ் தமிழில் செய்ய இருக்கிறார். அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் மற்றும் மலையாள ரீமேக் டப்பிங் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. இதனிடையே இ4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதன் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது. துருவ் நடிப்பதை மட்டுமே உறுதி செய்துள்ளார் விக்ரம். படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினரின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

தெலுங்கில் சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியான தெலுங்கு படம் அர்ஜுன் ரெட்டி. குறைந்த திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மக்கள் கொடுத்த வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்த்தப்பட்டது. குறைந்த முதலீட்டில் தயாரான இப்படம் 50 கோடியை வசூல் செய்துள்ளது. ஆகவே தமிழிலும் அதே வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கடந்த வருடம் துருவ் குட்நைட் சார்லி என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close