[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

மிரட்டும் டீஸர் - ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் ‘கொடிவீரன்’

kodiveeran-movie-trend-in-twitter-after-teaser-songs-release

இயக்குநர் முத்தையா மற்றும் நடிகர் சசிகுமார் கூட்டணியில் உருவாகி வரும் கொடிவீரன் படம் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி உள்ளது.

குட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இயக்குநர் முத்தையா சசிகுமாரை வைத்து ‘கொடிவீரன்’ என்கிற படத்தை இயக்கிவருகிறார். கொடிவீரன் திரைப்படத்தை சசிகுமாரின் ‘கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமே தயாரித்து வழங்குகிறது. ‘கொடிவீரன்’ படத்தில் சசிகுமாரோடு பசுபதி, மஹிமா, சனுஷா, வித்தார்த், பூர்ணா, பால சரவணன் என ஒரு நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

எஸ்.ஆர்.கதிர், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். மதயானைக் கூட்டம், சுந்தர பாண்டியன் படங்களுக்கு இசையமைத்த ரகுநந்தன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ‘கொடிவீரன்’ படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்துவரும் நிலையில், கடந்த மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டன. டீஸரானது முத்தையாவின் மற்றப் படங்களை போல் கிராமத்து பின்னணியிலும் மிரட்டும் வகையிலும் உள்ளது. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இடம்பிடித்துள்ளதை டீஸர் காட்டுகிறது. கொம்பன் மற்றும் குட்டிப்புலி படங்களின் சாயலும் டீஸரில் காணப்படுகிறது. நேற்று டீஸர் வெளியான நிலையில் ட்விட்டரில் கொடிவீரன் படம் இன்று டிரெண்ட்டில் உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close