[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை; மக்களின் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை மனவருத்தத்தோடு மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்- உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியுடனான 29 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்கிறது சிவசேனா
  • BREAKING-NEWS திடீரென APP மூலம் அரசியலில் நடிகர்கள் இறங்கியுள்ளனர்; அது அவர்களுக்கு ஆப்பாக தான் முடியும்- ஜெயக்குமார்
சினிமா 01 Oct, 2017 11:09 AM

அப்பா-மகனாக களமிறங்கும் கவுதமும் கார்த்திக்கும்!

karthik-and-gautham-to-act-together-for-the-first-time

திரு இயக்கும் படத்தில் மகன் கவுதமுடன் இணைந்து நடிக்கிறார் ’நவரச நாயகன்’ கார்த்திக்.

இயக்குனர் திரு, அடுத்து அப்பா-மகன் கதையை கொண்ட படத்தை இயக்குகிறார். இதில் கவுதம் கார்த்திக் மகனாகவும் அவரது நிஜ தந்தை கார்த்திக் அப்பாவாகவும் நடிக்கின்றனர். இதை ’இவன் தந்திரன்’ படத்தை தயாரித்த கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 
இயக்குனர் திரு கூறும்போது, ’இது அப்பா-மகன் கதையை கொண்ட படம். இரண்டாம் பாதியில் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் இருக்கும். கதைப்படி இருவரும் அப்பா-மகன் என்றாலும் ஆனால், நட்பாகத்தான் படத்தில் பழகுவார்கள். கவுதம் பாக்சராகவும் கார்த்திக் சார் அரசு ஊழியராகவும் நடிக்கிறார்கள். டைட்டில் இன்னும் முடிவாகவில்லை’ என்றார்.

படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்துவருவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
கார்த்திக், ’அனேகன்’ படத்துக்குப் பிறகு ’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். இதையடுத்து இந்தப் படத்தில் நடிக்கிறார். இதில் கார்த்திக் ஜோடியாக நடிக்க வைக்க முன்னாள் ஹீரோயின் ஒருவரிடம் பேசிவருவதாகக் கூறப்படுகிறது.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close