[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

இதற்கு சும்மாவே இருந்திருக்கலாம்: வெங்கட் பிரபுவை கிண்டல் செய்த கஸ்தூரி 

kasturi-commented-actress-dhansika-issues-on-facebook

சமீபத்தில் நடந்த விழித்திரு விழாவில் தன்ஷிகாவிடம் டி.ஆர். நடந்து கொண்ட விதம் குறித்து சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. தன்ஷிகாவை ஆதரிப்பதற்காக தன்ஷிகா ஆர்மி தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி அவரது ஃபேஸ் புக் பக்கத்தில் கடுமையான பதிவைச் செய்துள்ளார். அதில், "சமீபத்தில் ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் டி.ஆர். தன்ஷிகாவுக்கு சகட்டு மேனிக்கு மேடை நாகரிகம் பற்றி பாடம் எடுத்ததுதான் இப்போது ஹாட் டாப்பிக். பொதுவாக பலருக்கு, பரீட்சைக்கு நன்றாக முன் தாரிப்பு கொண்டு  போனாலே பாதி மறந்துவிடும். மேடையில் பேச சொன்னால் பதட்டத்தில் வார்த்தையே வராது. அதை மரியாதைக்குறைவு என்றோ கவனக்குறைவு என்றோ நான் உட்பட பலர் மதிக்கும் சகலகலாவல்லவர், பண்பாளர், டி.ஆர் கருதியிருக்கவேண்டாம். பாவம் அந்தப்பெண் எவ்வளவு மன்றாடியும் காலில் விழுந்தும் கூட டி.ஆருக்கு மனம் இளகவில்லை. சாமியாடிவிட்டுதான் ஓய்கிறார். இதை மேடையில் அமர்ந்திருந்த "பிரபலங்களும்" தடுக்கவில்லை, நிறுத்தமுயலவில்லை. வெங்கட் பிரபு, கிருஷ்ணா போன்றோர் இளித்தபடி ரசித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். விதார்த் கைதட்டுகிறார்! கண்ணுக்கு புலப்படாத பார்வையாளர்களும் பத்திரிக்கையாளர்களும் எப்படி எதிர்வினை செய்தார்கள் எனத் தெரியவில்லை.

சபை நாகரீகத்தைப்பற்றி இவர் பொங்கியபோது, அந்தப்பெண் பொறுமை காத்ததுதான் உண்மையில் சபை நாகரிகம். மாறாக , தன்ஷிகாவும் பதிலுக்கு பேசியிருந்தால் டி.ஆர் நிலைமை என்னவாகியிருக்கும்? "அரட்டை அரங்கம்" நிகழ்ச்சியில் இவர் பங்கேற்பாளர்களை எப்படியெல்லாம் காய்ச்சியெடுத்தாரோ என்னவோ. 

எல்லாவற்றைவிட கொடுமை, பேரப்பிள்ளைகளை கொஞ்சவேண்டிய வயதில் "தன்ஷிகாவுக்கு நான் அண்ணண் போல" என்றாரே , அதுதான் மிக மோசமான வசை!
இறுதியில் டி.ஆரே, "சும்மா ஒரு பரபரப்பு உண்டாக்க பேசினேன்’’ என்று சொல்கிறார். ஆகவே அவரை சொல்லி குற்றமில்லை. வேடிக்கை பார்த்த பெரிய மனிதர்கள்தான் வெட்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார் கஸ்தூரி.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு இந்த சர்ச்சை குறித்து பட்டும் படாமல் ஒரு விளக்கத்தை தந்திருந்தார். இந்த விளக்கத்தை பற்றி கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இதற்கு நீங்க சும்மாவே இருந்திருக்கலாம்’என்று கிண்டல் செய்துள்ளார்.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close