[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பற்றாக்குறையை மழை நீரை சேமிக்க வேண்டும் மழை பெய்ய மரங்களை வளர்க்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ஈரோடு மண்டல மாநாடு மூலம் தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் நல்ல மாற்றத்தை உருவாக்கிடுவோம் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS சென்னையில் டிஜிபி அலுவலகம் முன் நேற்று தீக்குளிக்க முயன்ற ஆயுதப்படை காவலர்கள் கணேஷ், ரகு ஆகியோர் கைது
  • BREAKING-NEWS சட்டத்திற்கு புறம்பாக பாஜகவினர் என்றைக்குமே செயல்படமாட்டார்கள் - தமிழிசை
  • BREAKING-NEWS புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரின் நியமனம் செல்லும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம் மத ஜாதி கலவரம் இல்லாமல் அமைதி பூங்காவாக திகழ்கிறது- ஓபிஎஸ்
  • BREAKING-NEWS உறுதியாக அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும்: முதல்வர் பழனிசாமி

சாமி 2 ஷூட்டிங் ஆரம்பம்

saamy-2-shoot-to-begin-with-vikram-and-trisha-in-lead-roles

விக்ரம் நடிக்கும் சாமி 2 ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதற்கான ஷூட்டிங் இன்று சென்னையில் ஆரமாகியுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பை இங்கு முடித்துவிட்டு வட இந்தியாவிற்கு புறப்பட உள்ளனர்.

போலீஸ் கதைகளை இயக்குவதில் இயக்குநர் ஹரி ஸ்பெஷலிஸ்ட். அவரது இயக்கத்தில் வெளியான சாமி படம் அதிகம் பேசப்பட்டது. 2003ல் வெளியான இந்தப் படத்தில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவரது ஆறுச்சாமி கேரக்டர் அதிகம் கவனத்தை ஈர்த்தது. இதில் ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இந்த ஜோடி திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. வேகம், விறுவிறுப்பு பக்கா கமர்ஷியல் பேக்கேஜ் என பலரும் பாராட்டிய படம். விக்ரமின் மார்க்கெட் வேல்யூவை ஏற்றிய படங்களில் சாமிக்கு முக்கிய இடமுண்டு. 

இதில் த்ரிஷா தயிர் சாதம் கொண்டு வரும் காட்சிகள், மனோரமாவின் குணச்சித்திர நடிப்பு என பலதும் கவனிக்கப்பட்டது. இதன் பெரிய வெற்றியை தொடர்ந்து இந்தப் படத்தின் பார்ட் 2 எப்போது எடுக்கப்படும் என பலமுறை இயக்குநர் ஹரியிடம் கேள்வி முன் வைக்கப்பட்டது. அப்போது எல்லாம் விக்ரம் கால்ஷீட் கிடைத்தால் படப்பிடிப்புக்கு கிளம்பி விடலாம் என்று அவர் கூறி வந்தார்.

ஐ படத்திற்கு பிறகு விக்ரம் பழைய உடல்நிலைக்கு திரும்ப கொஞ்சம் காலம் பிடிக்கும் என பலரும் பேசினார்கள். இந்நிலையில் மீண்டும் கட்டுமஸ்தான உடம்புக்கு  திரும்பி இருக்கிறார் விக்ரம். அவர் சிக்ஸ்பேக் ஸ்டைலில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் படம் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பழைய ஆறுச்சாமி விக்ரம் அப்படியே மாறியிருக்கிறார். சாமி 2வில் விக்ரமுடன் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பாளராகவும், ப்ரியன் ஒளிப்பதிவாளராகவும், மிலன் கலை இயக்குநராகவும், கனல் கண்ணன் சண்டை வடிவமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இப்படத்தை ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவிருக்கிறார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close