[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

கங்கனாரனாவத் நடித்த குயின் தமிழில் பாரிஸ் பாரிஸ் ஆனது

kajala-agarwal-new-film-paris-paris

 

கங்கனாரனாவத் நடித்த குயின் திரைப்படம் தமிழில் பாரிஸ் பாரிஸ் என எடுக்கப்பட உள்ளது. இதனை லைக்கர் மனோஜ் கேசவ் உடன் இணைந்து ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.

ஹிந்தியில் கங்கனா நடித்த கதாபாத்திரத்தை தமிழில் காஜல் அகர்வால் செய்கிறார். நாயகனாக சஷி வருண் நடிக்கிறார். இதற்கான அறிமுக விழா இன்று சென்னையில் நடந்தது. அதில் காஜல் அகர்வால் கலந்து கொண்டார். 

சிறிய நகரத்தைச் சேர்ந்த தன்னம்பிக்கை குறைவான ஒரு இளம் பெண்ணின் திருமணத்தை அவளது வருங்கால கணவனே தடுத்து நிறுத்திவிடுகிறான். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அப்பெண், தனியாகவே தேனிலவுக்கு செல்வது என முடிவெடுத்து, தனது பயணத்தை துவங்குகிறாள். அப்பயணத்தில் அவள் சந்தித்த புதிய மனிதர்களின் மூலம், அவளுக்கு ஏற்பட்ட புதுப்புது அனுபவங்களில் தனது சுய அடையாளத்தைக் கண்டு கொள்கிறாள். இதான் படத்தின் மையக் கரு.
இத்திரைப்படத்திற்கு அமித்திரிவேதி இசையமைக்கிறார். சத்யாஹெக்டே ஒளிப்பதிவு செய்கிறார். வசனங்கள் மற்றும் பாடல்களை தமிழச்சி தங்கபாண்டியன் எழுதுகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் என நான்கு தென்னக மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வரும் இத்திரைப்படம், ஒரே சமயத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.    
12.5 கோடி பட்ஜெட்டில் தயாரான “குயின்”வசூலில் 97 கோடிகளைக் குவித்துச் சாதனை படைத்தது. சிறந்த திரைப் படத்திற்கான இந்திய தேசிய விருது, சிறந்த நடிகைக்கான தேசிய விருது உட்பட 32 விருதுகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.  


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Kajala agarwalParis parisFilm
Advertisement:
Advertisement:
[X] Close