[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்

இந்தியிலும் டைட்டில் பஞ்சாயத்து: ராய் லட்சுமி படத்துக்கு சிக்கல்!

julie-producer-sue-agaist-director-deepak

நேகா துபியா, பிரியன்ஷூ சட்டர்ஜி நடித்து 2004-ல் வெளியான படம், ஜூலி. இந்தப் படத்தை தீபக் ஷிவதசானி இயக்கி இருந்தார். என்.ஆர்.பஷிஷா தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் 2-ம் பாகம் ’ஜூலி 2’ என்ற பெயரில் இப்போது உருவாகி இருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய தீபக் இயக்கியுள்ளார். ராய் லட்சுமி, கிளாமராக நடித்துள்ளார். இந்திய மத்திய தணிக்கைக் குழுவின் முன்னாள் தலைவர் பஹ்லாஜ் நிகலானி தயாரித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக இளம் பெண்கள் எவ்வாறு சிதைக்கப்படுகிறார்கள் என்பதை சொல்லும் படமான இது, அடுத்த மாதம் 6-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. 

இந்நிலையில் முதல் பாகத்தின் தயாரிப்பாளர் பஷிஷா இந்தப் படத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்தப் படத்தின் தலைப்பும் கதையும் எனக்கு சொந்தமானது. எனது அனுமதி இல்லாமல் என் படத்தின் தலைப்பையும் கதையையும் பயன்படுத்தி 2-ம் பாகத்தை உருவாக்கி உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜூலி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் எண்ணமில்லை என்று என்னிடம் கூறிவிட்டு இயக்குனர் தீபக் இப்படி செய்திருப்பது ஏமாற்றும் செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. 

தமிழில், மெர்சல், நான் ஆணையிட்டால் படங்களுக்கு டைட்டில் பஞ்சாயத்து ஏற்பட்டுள்ள நிலையில் இந்தி படத்துக்கும் டைட்டில் பஞ்சாயத்து ஏற்பட்டிருப்பது பரபரப்பாகி இருக்கிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close