[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

மும்பை மழை: விமானத்தில் அவஸ்தைப்பட்ட டாப்ஸி

taapsee-pannu-left-stranded-due-to-mumbai-rains

கடும் மழை காரணமாக, மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி ஓடி, சகதியில் சிக்கியது. இதையடுத்து விமான நிலையத்தின் ரன் வே மூடப்பட்டது. மும்பையில் இருந்து புறப்பட இருந்த 108 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மும்பையில் இறங்க வேண்டிய 56 விமானங்கள் கோவா, பெங்களூரு, டெல்லி மற்றும் ஐதராபாத்துக்குத் திருப்பி விடப்பட்டன.

இதில் கொல்கத்தாவில் இருந்து மும்பை வந்த விமானம் ஒன்று ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது. அந்த விமானத்தில் நடிகை டாப்ஸி, இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நடிகர் வருண் தாவன் சிக்கிக்கொண்டனர். ’ஜுத்வா 2’ படத்தின் புரமோஷனுக்காக கொல்கத்தா சென்ற அவர்களால் குறிப்பிட்ட நேரத்துக்குள் மும்பைக்கு திரும்ப முடியவில்லை. இதனால், அவர்கள் அடுத்து கலந்துகொள்ள இருந்த பட புரமோஷன் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இதுபற்றி டாப்ஸி கூறும்போது, ‘நாங்கள் வந்த விமானம் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு ஏற்கனவே பல விமானங்கள் வெயிட்டிங்கில் இருந்ததால், நாங்கள் விமானத்துக்குள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. 2 மணி நேரத்துக்கும்
மேலாக விமானத்துக்குள்ளேயே காத்திருந்தோம். இது பெரும் அவஸ்தையாக இருந்தது. பிறகு வெளியே வந்தோம். இதற்குள் படக்குழு, ஐதராபாத்தில் பட புரமோஷனை ஆரம்பிக்க முடிவு செய்தது. அதன்படி, ஐதராபாத் மீடியாவிடம் படம் பற்றி பேசிவிட்டு அந்த நேரத்தை பயனுள்ளதாக கழித்தோம்’ என்றார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close