[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

அமெரிக்காவில் நயன்தாராவுடன் பிறந்தநாள் கொண்டாடிய இயக்குனர்

nayantara-s-birthday-celebration

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது 33 வது பிறந்த நாளை தனது தோழி நயன்தாராவுடன் அமெரிக்காவில் கொண்டாடினார். 

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் தந்தியடிக்கின்றன. அந்தத் தகவல்களை சம்பந்தப்பட்ட இருவரும் இதுவரை மறுக்கவில்லை. இந்நிலையில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை இருவரும் அமெரிக்காவில் கொண்டாடினர்.

புகழ் பெற்ற ப்ரூக்லின் ஃப்ரிட்ஜில் அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது. அவர்கள் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்ட ப்ரூக்லின் பாலம் சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் பாடல் காட்சியிலும் இடம்பெற்றுள்ளது. அந்த இடத்தில் சிம்புவுடன் த்ரிஷா டூயட் பாடும் காட்சி படமாக்கப்பட்டிருந்தது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இடம்பெற்ற அந்தக் காட்சியையும், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் வெளியிட்டுள்ள இந்தப்புகைப்படத்தையும் இணைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். 

முன்னதாக சிம்புவுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டு பின்னர் இருவரும் பிரிந்தனர். அரைடஜன் படங்களை கையில் வைத்திருக்கும் நயன்தாராவும், தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வரும் விக்னேஷ் சிவனும் கிடைத்த இடைவேளையில் நியூயார்க்கிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close