[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

தமிழ்கன், தமிழ்ராக்கர்ஸ் அட்மின்களின் புகைப்படங்கள் வெளியீடு

release-of-photos-of-tamil-rockers-and-admins

இணையத்தில் சட்டவிரோதமாக புதிய திரைப்படங்களை வெளியிட்டு வந்த அட்மிகள் இருவரது புகைப்படத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. 

புதிய திரைப்படங்கள் வெளியான அன்றே இணையதளங்களில் அந்தப்படங்களை சட்டவிரோதமாக சில இணையதளங்களில் பதிவேற்றி வருகின்றனர். இதனால், திரைத்துறையினர் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பதவியேற்ற விஷால் பைரசியை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்கன் இணையதளத்தின் அட்மின் ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் அவருக்கு தொடர்பில்லை எனத் தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று விஷால் நடித்த துப்பறிவாளன் படம் வெளியானது. நேற்றே தமிழ்கன், தமிழ் ராக்கஸ் ஆகிய இணையதளங்களில் இப்படம் பதிவேற்றப்பட்டது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் விஷால் பிலிம் பேக்டரியும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், சட்டவிரோதமாக படங்களை பதிவேற்றும் இணையதளங்களின் இரு அட்மின்களான அரவிந்த் லோகேஸ்வரன், டிக்ஸான் ராஜ் ஆறுமுக சாமி ஆகிய இருவர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.  இருவரும் தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் இணையதளத்தின் அட்மிகள் எனத் தெரிய வந்துள்ளது. தமிழ் ராக்கர்ஸ் அட்மினான அரவிந்த் லோகேஷ் சுவிட்சர்லாந்த்தில் இருப்பதும், தமிழ்கன், தமிழ்டிபாக்ஸ் அட்மினான டிக்ஸான் ராஜ் கனடாவில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இவர்களை பற்றிய தகவல்கள் அறிந்தால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினருக்கு  piracy@tfpc.org இந்த இ-மெயில் மூலம் தெரிவிக்கலாம். தகவல்கள் தெரிவிப்பவர்களுக்கு உரிய சன்மானமும் அளிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close