[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

சமந்தா திருமணம்: 150 பேருக்கு மட்டுமே அழைப்பு

samantha-and-naga-chaitanya-all-set-to-dive

நடிகை சமந்தா- நாக சைதன்யா திருமணத்துக்கு வெறும் 150 பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பட்டுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யாவும் சமந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, ஜனவரி 29-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்து மற்றும் கிறித்துவ முறைப்படி நடைபெற்ற இந்த விழாவில் இரண்டு குடும்பங்களுக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 
திருமணம் அக்டோபர் 6 மற்றும் 7-ம் தேதிகளில் கோவாவில் நடக்கிறது. முதல் நாள் இந்து முறைப்படியும் மறுநாள் கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடக்க இருக்கிறது. இதற்காக இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் அக்டோபர் 1-ம் தேதியே கோவா செல்கின்றனர். இந்த திருமணத்துக்கு மொத்தம் 150 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

பின்னர் ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரையுலகினர் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. 
வரவேற்பு தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை. திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடிப்பார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close