[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

உலக சாதனை படைத்த விவேகம் டீசர்!

the-world-s-record-vivegam

அஜித் நடித்த விவேகம் பட டீசர் உலக அளவில் சாதனை படைத்துள்ளது.

சிவா இயக்கத்தில் விவேகம் படம் திரைக்கு வந்து 3 வாரங்களை கடந்து விட்டது. இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. விவேகம் படத்தின் டீசர்தான் இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையைப் படைத்திருந்தது. முன்பு சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘டியூப்லைட்’ திரைப்படம்தான் 5 லட்சம் லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. விவேகம் படத்தின் டீசர் வெளியான சில நாட்களிலேயே அந்த சாதனை முறியடித்திருந்தது. இந்நிலையில் விவேகம் படத்தின் டீசரை இதுவரை 2 கோடியே 5 லட்சத்து 20 ஆயிரத்திற்கு மேலானோர் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் 5 லட்சத்து 75 ஆயிரம் பேர் இதுவரை லைக் செய்துள்ளனர். 

இதன் மூலம்  உலக அளவில் அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையை விவேகம் டீசர் நிகழ்த்தி உள்ளது. முதலிடத்தில் இருந்த ஹாலிவுட் படமான ஸ்டார்வார்ஸ் திரைப்பட டீசர் 5 லட்சத்து 73 ஆயிரம் லைக்குகளுடன் இரண்டாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. அவென்ஜர்ஸ் திரைப்படம் 5, லட்சத்து 25 ஆயிரம் லைக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

இதன் மூலம் இந்தியாவை சேர்ந்த திரைப்படங்களில் உலக சாதனை படைத்த முதல் டீசர் என்ற சாதனையை விவேகம் படம் பெற்றுள்ளது.  
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close