[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை இனி சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள்- டி. ராஜேந்தர்
  • BREAKING-NEWS அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு
  • BREAKING-NEWS சென்னை போர் நினைவுச் சின்னத்தில் உள்ள தேசியக் கொடி சேதமடைந்துள்ளது
  • BREAKING-NEWS கச்சதீவு புனித அந்தோணியார் கோயிலின் 2 ஆம் நாள் திருவிழா சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது
  • BREAKING-NEWS மத்திய பிரதேசம்: மங்காலி, கொலாரஸ் பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS நாமக்கல்: திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சியில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் வருமானவரி சோதனை

அமராவதி இறுதி வடிவமைப்பில் ராஜமவுலி!

amaravati-to-get-rajamouli-stamp

ஆந்திராவின் புதிய தலைநகரை உருவாக்கும் வேலைகள் பரபரப்பாக நடந்துவருகின்றன. இதன் இறுதி வடிவமைப்பில் இயக்குனர் ராஜமவுலி பங்கேற்க இருக்கிறார். 

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்த பிறகும் இரண்டு மாநிலத்துக்கும் ஐதராபாத் தலைநகராக இருந்து வருகிறது. 10 ஆண்டுகள் இந்த உரிமை உள்ளது. இந்நிலையில் ஆந்திராவுக்கு அமராவதியை புதிய தலைநகராக, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அமராவதியை பலகோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக உருவாக்க, சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். இதற்கான மாதிரி வடிவங்கள் பல்வேறு நாட்டு நிபுணர்களிடம் பெறப்பட்டுள்ளது. அதில் ஆந்திர அரசு, பிரிட்டீஷ் கட்டிடகலை நிறுவனமான நார்மன் பாஸ்டர் அண்ட் பார்ட்னர்ஸை தேர்வு செய்துள்ளது.


இந்நிறுவனம் சட்டப்பேரவை அலுவலகம், உயர்நீதிமன்றம், அரசு வளாகம் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்களை உள்ளடக்கிய உலக தரமான வடிவமைப்பை ஆந்திர அரசிடம் சமர்பித்துள்ளது. இது இறுதி வடிவமைப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த வடிவமைப்புக்கு ’பாகுபலி’ இயக்குனர் ராஜமவுலி இறுதி வடிவம் கொடுக்க இருக்கிறார்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ராஜமவுலியிடம் ஆலோசித்து முடிவெடுக்க மூத்த அதிகாரிகளிடம், கூறியுள்ளார். இதையடுத்து ராஜமவுலி, நார்மன் பாஸ்டர் நிறுவனத்துடன் பேச இருக்கிறார். இதன் இறுதி வடிவமைப்பை, லண்டன் சென்று அக்டோபர் மாதம் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டு முடிவு செய்ய இருக்கிறார்.

வீடியோ

Advertisement:
Related Tags : ராஜமவுலி
Advertisement:
Advertisement:
[X] Close