[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை இனி சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள்- டி. ராஜேந்தர்
  • BREAKING-NEWS அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு
  • BREAKING-NEWS சென்னை போர் நினைவுச் சின்னத்தில் உள்ள தேசியக் கொடி சேதமடைந்துள்ளது
  • BREAKING-NEWS கச்சதீவு புனித அந்தோணியார் கோயிலின் 2 ஆம் நாள் திருவிழா சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது
  • BREAKING-NEWS மத்திய பிரதேசம்: மங்காலி, கொலாரஸ் பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS நாமக்கல்: திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சியில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் வருமானவரி சோதனை

விஜி சந்திரசேகர் மகள் நடிகையானார்

viji-chandrasekhar-daughter-has-been-a-new-actress

மதயானைக் கூட்டம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த விஜி சந்திரசேகரின் மகளும் நடிகையாகி இருக்கிறார்.

மதயானைக்கூட்டம் படத்தில் நடித்த விஜி சந்திரசேகர் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டவர். தொலைக்காட்சித் தொடர்களிலும் விஜி நடித்துள்ளார். ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்திருந்தார். கடந்த சிலமாதங்களாக விஜியின் மகள் நடிக்க இருப்பதாக செய்திகள் வலம் வந்தன. ஆனால் அதில் உண்மையில்லை என்றும் காலம் வரும் சமயத்தில் நானே அறிவிப்பேன் என்றும் விஜி கூறி வந்தார். 

இப்பொழுது அவரது மகள் நடிக்க உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தனது மகள் கல்லூரி படிப்பை முடித்து விட்டதாகவும் விரைவில் வெள்ளித்திரைவில் அவர் வலம் வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரது மகளை நடனத்தில் மிக சிறப்பாக வளர்த்தெடுத்தவர் கலா மாஸ்டர்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார் விஜி.  ஆனால் என்ன படம்? யார் இயக்குகிறார்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close