[X] Close
JUST IN
 • BREAKING-NEWS நாகை: வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்
 • BREAKING-NEWS தலைமறைவாக உள்ள திரைப்பட பைனான்ஸியர் அன்புச்செழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
 • BREAKING-NEWS கர்நாடகா: கல்புர்கியில் சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுவோருக்கு ரோஜாப்பூ தருகிறது போலீஸ்
 • BREAKING-NEWS இரட்டை இலை கிடைத்ததால் இனி எந்த தேர்தல்களிலும் அசைக்க முடியாத இயக்கமாக அதிமுக இருக்கும்- எம்.ஆர். விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS திருவாரூர்: அச்சிதமங்களத்தில் சாலையோரம் இருந்த 2 வீடுகளுக்குள் நிலக்கரி லாரி புகுந்து 2 பேர் காயம்
 • BREAKING-NEWS வேலூர்: 4 மாணவிகள் தற்கொலைக்கு காரணமான ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- கோ.அரி எம்.பி
 • BREAKING-NEWS இரட்டை இலையை மீண்டும் மீட்போம் என்ற தினகரனின் பகல் கனவு பலிக்காது - அமைச்சர் தங்கமணி
 • BREAKING-NEWS சோதனையான காலத்தில்தான் தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும்: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS அதிமுகவுக்கு சின்னம் கிடைத்துவிட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கும் என கூற முடியாது: திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: துரைமுருகன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும்: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன்: மதுசூதனன்
 • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு: காதர் மொகிதீன்
 • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் விசிகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் முடிவு அறிவிப்பு- திருமாவளவன்
சினிமா 14 Sep, 2017 06:10 PM

மறுபடியும் நடிக்க வருகிறார் அனுஹாசன்

anushasan-is-coming-to-act-again

கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனின் மகள் அனுஹாசன் மறுபடியும் நடிக்க வருகிறார்.

அனுஹாசன் ‘இந்திரா’ படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார். திருமணத்திற்குப் பிறகு லண்டனில் செட்டில் ஆகியிருந்தார். அவ்வபோது சமயம் கிடைக்கும் போது தமிழ்நாட்டுக்கு வந்து டிவி ஷோக்களில் மட்டும் தொகுப்பாளினியாக பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் தொகுத்து வழங்கிய ‘காஃபி வித் அணு’ ரசிகர்கள் மத்தியில் இவருக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

லண்டன் வாழ்க்கையில் இருந்து திரும்பி இருக்கும் அனுஹாசன் மீண்டும் நடிக்க முடிவெடுத்திருப்பதாக கூறி இருக்கிறார். அதோடு இனி இந்தியாவிலேயே தங்கிவிடப் போவதாகவும் கூறியுள்ளார். டிவி நிகழ்ச்சிகளில் ஏற்கெனவே அனுபவம் பெற்ற இவரிடம் அவரது சித்தப்பா கமஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் எப்படி இருக்கிறது? பார்த்தீர்களா? என கேட்டதற்கு “டிவி பார்க்கவே நேரம் இல்லை. விரைவில் பார்த்துவிடுவேன். இனிமேல் எங்க போகப் போகிறேன். சென்னையில் தானே இருக்கப் போகிறேன்” என ஸ்வீட்டாக பதில் சொல்கிறார் அனுஹாசன். 

அனுஹாசன் அமெரிக்காவில் இருந்த போது அங்கே எடுக்கப்பட்ட வல்லதேசம் என்ற படத்தில் அனுஹாசன் நடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இனி இங்கேயே தங்கி தொடர்ந்து படங்களில் நடிக்கப் போவதாக அனுஹாசன் கூறியிருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close