[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்
  • BREAKING-NEWS மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு
  • BREAKING-NEWS வளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு

நிர்வாணமாக நடித்த விஜய்சேதுபதி!

nude-acting-vijay-sethupathi

நடிகர் விஜய்சேதுபதி புரியாத புதிர் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்ததாக அப்படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி நடித்த புரியாதபுதிர் படம் எடுக்கப்பட்டு வெகுநாட்களுக்குப்பிறகு சமீபத்தில் வெளியானது. இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப்படத்தில் வரும் மழைக்காட்சியில் விஜய்சேதுபதி நடித்திருந்த விதத்தைப்பற்றி அப்படதின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பகிர்ந்து கொண்டார். அதில்,‘விஜய்சேதுபதி மிகப்பெரிய நடிகராக உயர்ந்து வருகிறார். அப்படி இருந்தும் காட்சிக்கு என்ன தேவையோ அதன்படி மறுப்பேதும் சொல்லாமல் நடித்துக் கொடுப்பார். புரியாத புதிர் படத்தில் ஒரு மழைக்காட்சியில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என கூறினேன். மறுப்பேதும் சொல்லாமல் உடனே ஒப்புக்கொண்டார். சிவப்பு நிற சாயம் பூசப்பட்ட ரெயின் கோட் அணிந்திருப்பார். மழையில் அவர் நனைய நனைய அது சாயம் இறங்கி கண்ணாடி கவர் போலாகி அவர் நிர்வாணமாய் நிற்பது போல தெரியும். இதில் உண்மையாகவே அவர் நிர்வாணமாக நடித்திருந்தார்’எனத் தெரிவித்துள்ளார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவர் நடிக்க இருக்கும் பெண் கேரக்டர் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலானது. 96 படத்தில் அவர் 96 வயது முதியவராக நடித்து வருகிறார். அதே போல் ஒருநாள் பார்த்து சொல்றேன் படத்தில் அவர் பழங்குடியின தலைவராக மாறுபட்ட வேடத்தில் நடித்து வருகிறார்.   

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close