[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன்
  • BREAKING-NEWS நாட்டில் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.90,669 கோடி: மத்திய அரசு அதிகாரிகள்
  • BREAKING-NEWS திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார்: கனிமொழி எம்.பி
  • BREAKING-NEWS வைகோவுக்கு பாதுகாப்பு தர ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமனம்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைவரும் அமைதி காக்க வேண்டும்: மைத்ரேயன் எம்.பி
  • BREAKING-NEWS கமலை பாஜகவில் இணைக்கலாமா என்பதை தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்: எஸ்.வி.சேகர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் கல்வி புரட்சி செய்தவர் காமராஜர்: மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS திண்டுக்கல் மாவட்டத்தில் ஜிகா வைரஸ் இருப்பதை அரசு கண்டுபிடித்துள்ளது: அமைச்சர் விஜயாஸ்கர்
  • BREAKING-NEWS கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
  • BREAKING-NEWS அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது நான் அவரை பார்க்கவில்லை: வெற்றிவேல்
  • BREAKING-NEWS சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை பிரிவில் மின்கசிவால் தீ விபத்து
  • BREAKING-NEWS விமானப் பயணத்திற்கு இனி அடையாள அட்டை தேவையில்லை..!
  • BREAKING-NEWS திருவள்ளூர் ஆட்சியர், தமிழக வருவாய் துறை செயலாளருக்கு இந்த மாத சம்பளம் வழங்க தடை
சினிமா 11 Sep, 2017 12:41 PM

நிக்கி கல்ராணிக்கு ஆசிரியரான கௌதம் கார்த்திக்

harahara-mahadevagi-audio-released

கெளதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்துள்ள படம், 'ஹர ஹர மகாதேவகி'. புளு கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ், தங்கம் சினிமாஸ் தங்கராஜ் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் பி. ஜெயகுமார் இயக்கியுள்ளார். பாலமுரளி பாலு இசை அமைத்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. 

இதில் நிக்கி கல்ராணி பேசும்போது, ’டார்லிங் படம் மூலம் என்னை  அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இந்த படத்தின் கதையை கேட்கும்படி சொன்னார். இயக்குநர் சந்தோஷ், என் வீட்டுக்கு வந்து கதை சொன்னார். கதையை கேட்டு சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது. சந்தோஷ் என்னிடம் கதை சொன்ன போது என் பகுதியை மட்டும்தான் கூறினார். இப்போது இங்கே வந்த பிறகு தான் கதை, திரைக்கதை, வசனம் என்று அனைத்தும் எனக்கு கொஞ்ச கொஞ்சமாக தெரிகிறது. கௌதம் கார்த்திக் எனக்கு நல்ல நண்பன். ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு தமிழ் சரியாக தெரியாததால் ஆசிரியர் போல தமிழ் கற்று கொடுத்தார்’ என்றார். 

தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, கதிரேசன், ராஜசேகர பாண்டியன், தயாரிப்பாளர் தங்கராஜ், நடிகர்கள் ரவிமரியா, சதீஷ், இயக்குநர் ஆர்.கண்ணன், கௌரவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.​

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close