[X] Close
JUST IN
 • BREAKING-NEWS தமிழகத்தில் கல்வி புரட்சி செய்தவர் காமராஜர்: மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS திண்டுக்கல் மாவட்டத்தில் ஜிகா வைரஸ் இருப்பதை அரசு கண்டுபிடித்துள்ளது: அமைச்சர் விஜயாஸ்கர்
 • BREAKING-NEWS கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி
 • BREAKING-NEWS தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
 • BREAKING-NEWS அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது நான் அவரை பார்க்கவில்லை: வெற்றிவேல்
 • BREAKING-NEWS சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை பிரிவில் மின்கசிவால் தீ விபத்து
 • BREAKING-NEWS விமானப் பயணத்திற்கு இனி அடையாள அட்டை தேவையில்லை..!
 • BREAKING-NEWS திருவள்ளூர் ஆட்சியர், தமிழக வருவாய் துறை செயலாளருக்கு இந்த மாத சம்பளம் வழங்க தடை
 • BREAKING-NEWS குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி அரசு செல்கிறது: நிலோபர் கபில்
 • BREAKING-NEWS கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள் செப்.28 க்கு பிறகு அமலுக்கு வரும் என ஐசிசி அறிவிப்பு
 • BREAKING-NEWS பா.ஜ.க.வுடன் கைகோர்க்கவும் தயார்: கமல்ஹாசன்
 • BREAKING-NEWS தீபாவளிக்கு வெளியூர் செல்ல அக்டோபர் 15 முதல் 17 வரை சிறப்புப் பேருந்துகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS அக்டோபர் 3 ஆம் தேதி முதல் டெல்லி மெட்ரோ ரயில் கட்டணம் ரூ. 10 உயர்த்தப்படுகிறது
 • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபாவுக்கு கத்திக்குத்து
சினிமா 10 Sep, 2017 11:12 AM

மீண்டும் நடிக்க வருகிறார் ‘அரண்மனைக் கிளி’ காயத்ரி

gayatri-is-comeback-in-movie-arranmani-killi

‘அடி பூங்குயிலே.. பூங்குயிலே கேளு’பாடல் மூலம் பரவலாக அறியப்பட்டவர் அரண்மனைக்கிளி காயத்ரி. அவர் மீண்டும் நடிக்க இருக்கிறார்.

ராஜ்கிரன் நடிப்பில் பெரும் வெற்றி அடைந்தப் படம் அரண்மனைக்கிளி. இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் காயத்ரி. இந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர். பிறகு ராஜ்கிரண் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்பே ‘செம்பருத்தி’ படத்தில் இவரை ஹீரோயினாக போட்டு சில நாள்கள் ஷூட்டிங் போனது. ஆனால் வேறு சில காரணங்களால் அப்படத்தில் காயத்ரி நடிக்கவில்லை. அரண்மனைக் கிளி வெற்றிக்குப் பின் ‘எஜமான்’ படத்தில் இவர் ஹீரோயினாக நடிக்க தேர்வு செய்யப்பட்டு இருந்தார். மொழிப் பிரச்னையால் அந்தப் படத்தில் நடிக்காமல் விலகிக் கொண்டார் காயத்ரி. மும்பைவாசியான இவர் காதல் திருமணத்திற்குப் பிறகு சென்னையிலேயே தங்கிவிட்டார். குடும்பம், பிசினஸ் என்று இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த காயத்ரி இப்பொழுது மீண்டும் நடிக்க முடிவெடுத்திருக்கிறார். இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என புதிய தலைமுறை இணையதளத்திற்கு பிரத்யேகமாக பேட்டி அளித்திருக்கிறார்.

தனது ரீஎன்ட்ரி குறித்து அவர் பேசுகையில், “எனக்கு நடிக்க வேண்டும் என்ற விருப்பமே இல்லை. எங்க வீட்டில் குழந்தைகள் அதிகம். அவர்கள் என் பழைய படங்களை யுடியூப்பில் போட்டு பார்த்தார்கள். என் நடிப்பு அவர்களுக்கு பிடித்திருந்தது. திரும்ப ஏன் நீங்க நடிக்க கூடாது? எனக் கேள்வி கேட்டார்கள். கட்டாயம் நடித்தே ஆக வேண்டும். எங்களுக்காக உங்க திறமையை நீங்கள் வீணடித்து இருக்கக் கூடாது என வருத்தப்பட்டார்கள். குழந்தைகள் விரும்பத்திற்காக மீண்டும் நடிக்க முடிவெடுத்திருக்கிறேன்” என்கிறார் காயத்ரி. இவரது நிஜப் பெயர் சந்தோஷ். ஆண் பிள்ளை பெயராக இருக்கிறதே எனக் கேட்டால், “ஆம். எங்கள் வீட்டில் அதிக பெண் பிள்ளைகள். ஆகவே அம்மா ஆண் பிள்ளை இல்லாத குறையைப் போக்க எனக்கு இந்தப் பெயரை வைத்தார்” என்றார் காயத்ரி.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close