[X] Close
JUST IN
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
 • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
 • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
 • BREAKING-NEWS புதிய வரைவு பாடத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் http://www.tnscert.org தளத்தில் வெளியீடு
 • BREAKING-NEWS தாஜ்மஹாலை பராமரிப்பதில் ஏன் உத்தரபிரதேச அரசு தொய்வுடன் செயல்படுகிறது- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS மதுரை: முனி கோயில் நான்கு வழிச்சாலையில் 5000 விவசாயிகள் சாலை மறியல்
 • BREAKING-NEWS முட்டை விலை உயர்வை காரணம்காட்டி சத்துணவில் முட்டையை நிறுத்த முயற்சிப்பது வேதனை தருகிறது- ஸ்டாலின்
 • BREAKING-NEWS தமிழகத்தில் பாஜகவால் கால் அல்ல, கையை கூட ஊன்ற முடியாது: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கட்சித்தொடங்க தொண்டர்களிடம் பணம் கேட்ட ஒரே நபர் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி
சினிமா 09 Sep, 2017 01:29 PM

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து திரும்புகிறார் பீனிக்ஸ் அஜித்!

ajithkumar-injury

‘விவேகம்’படப்பிடிப்பில் கரடுமுரடான மலைப்பாதைகளில் ‘ரிஸ்க்’ எடுத்து பல காட்சிகளில் நடித்திருந்தார் நடிகர் அஜித்குமார். அவரது உடலில் அறுவை சிகிச்சை நடக்காத இடங்களே இல்லை என சொல்லும்படியாக பல இடங்களில் அடிப்பட்டு ‘ப்ளேட்’ வைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள் ஒவ்வொரு முறையும் இதை போல சாகசங்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியும் அதற்காக அஜித் என்றும் பயந்து பின் வாங்கியதே இல்லை. ஏற்கெனவே ‘வேதாளம்’ படப்பிடிப்பில் அவரது கால் மூட்டில் அடிப்பட்டு மூட்டு நழுவிப் போனது. உடன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அ|றிவுறுத்திய போது தன்னால் படப்பிடிப்பு நின்று போய்விடக் கூடாது என்று சொல்லி காயம்பட்ட காலுடன் ஐஸ் கட்டிகளால் ஒத்திடம் கொடுத்துக் கொண்டே தொடர்ந்து பாடல் காட்சியில் நடித்து கொடுத்தார் அஜித். அதன் பின் ஆபரேஷன் செய்து கொண்டு ஓய்வில் இருந்த அவர் மறுபடியும் ‘விவேகம்’ படத்தில் நடித்து முடித்தார். எதிர்பார்த்ததை போலவே இந்தப் படத்திலும் அவருக்கு இரண்டு இடங்களில் அடிப்பட்டன. அதற்கான அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. விரைவில் அவர் வீடு திரும்ப இருக்கிறார் என அவரது நெருங்கிய வட்டாரம் தகவல் தருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close