[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி
  • BREAKING-NEWS தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்
  • BREAKING-NEWS உத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்

கமல் அரசியலுக்கு வந்தால் நல்லது : நடிகர் எஸ்.வி.சேகர்

kamal-s-politics-is-good-actor-sv-sekar

கமல்ஹாசன் போன்ற நேர்மறையான எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது என நடிகர் எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக அரசியல் விமர்சனங்களையும், சமூக கருத்துகளையும் அதிகமாக தெரிவித்து வருகின்றார். கடந்த சில வாரங்களுக்கு முன், தமிழக அரசில் ஊழல் அதிகரித்துள்ளதாக கமல் குற்றம்சாட்டினார். இதையடுத்து அமைச்சர்களுக்கும், கமலுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன்பிறகு கமல், தமிழக அரசை அதிகமாக விமர்சித்து வருகிறார். மேலும் அண்மையில் திருமண விழா ஒன்றில் பேசிய அவர், தான் அரசியலுக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், முறையாக வருமான வரி கட்டும் கமல் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அவரை போன்ற நேர்மறையான எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது என்றும் தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close