[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

விஜய் சேதுபதியின் நல்லமனசு யாருக்கும் வராது - நெகிழ்ச்சியில் கோடம்பாக்கம் 

vijay-sethupathi-s-goodman-will-not-come-to-anyone

வெளிநாட்டு டானாக விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை அவரே தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இயக்குநர் கோகுல், விஜய் சேதுபதியை வைத்து இப்போது ‘ஜங்கா’  என்ற படத்தை இயக்குகிறார். இந்தப்  படத்தில் விஜய் சேதுபதி ஸ்டைலிஷான ஃபாரின் டானாக நடிக்கப் போகிறார். இதில் ‘வனமகன்’ சயிஷா ஜோடியாக நடிக்கிறார்.

கோகுலிடம் படத்தின் கதையைக் கேட்டு ஓகே சொன்ன விஜய் சேதுபதி, பட்ஜெட்டைக் கேட்டதும், ‘நானே தயாரிக்கிறேன்’ என்று  சொல்லிவிட்டாராம். இதற்கு காரணம், பட்ஜெட் தொகை 20 கோடி ரூபாய் என்பதாம். இதுவரை இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் விஜய் சேதுபதி  நடித்ததில்லை என்பதால், மற்ற தயாரிப்பாளர்களை ரிஸ்க் எடுக்க வைக்க வேண்டாம் என நினைத்து தானே தயாரிக்கிறாராம். இந்த நல்ல மனசு யாருக்கு வரும்? என்பதுதான் கோடம்பாக்கத்தின் பேச்சாக இருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பிரான்ஸில் 60 சதவீதமும், சென்னை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் 40 சதவீதமும் நடைபெற உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close