[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,281 கன அடியிலிருந்து 14,774கன அடியாக அதிகரிப்பு
 • BREAKING-NEWS மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு
 • BREAKING-NEWS மும்பையின் மேற்கு பந்த்ராவில் குப்பைகளை அள்ளி தூய்மைப்பணியில் ஈடுபட்டார் சச்சின்
 • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.61.81
 • BREAKING-NEWS கோடியக்கரையில் தரை தட்டிய கப்பலை மீட்க 60 அடி நீள 2 விசைப்படகுகள் வர உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS அல்லிநகரம் பகுதியில் கஞ்சா விற்ற மணி என்ற பெண் கைது- 1.25 கிலோ கஞ்சா பறிமுதல்
 • BREAKING-NEWS சென்னை: கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்பில்லர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தூரல் மழை
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு ஸ்டாலின் கண்டனம்
 • BREAKING-NEWS நாட்டில் தற்போது மின் பற்றாக்குறை என்பதே இல்லை: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா யோஜனா திட்டம் தொடக்கம்
 • BREAKING-NEWS மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் விரைவில் தேர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
 • BREAKING-NEWS நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபம் அக்டோபர் 1ஆம் தேதி திறப்பு
சினிமா 05 Sep, 2017 08:33 AM

’சம்மக் சல்லோ’ பாடியவருக்கு சிறை!

man-jailed-for-day-for-calling-woman-chhammak-chhallo

நடிகர் ஷாருக்கான், கரீனா கபூர் நடித்து  2011–ம் ஆண்டு வெளியான இந்தி படம் ‘ரா ஒன்’. இந்த படத்தில் இடம்பெற்ற ‘சம்மக் சல்லோ’ பாடல் மெகா ஹிட்டான ஒன்று. இந்த பாடலில் இடம்பெற்ற ’சம்மக் சல்லோ’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் ஒருவர் தண்டனை அனுபவித்திருக்கிறார். 

மகாராஷ்டிர மாநிலம் தானேயை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி, வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியபோது, பக்கத்து வீட்டு குப்பைத் தொட்டியை எதிர்பாராமல் தட்டிவிட்டார். ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரர், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவர் அந்தப் பெண்ணை ‘சம்மக் சல்லோ’ என்றாராம்.

இதனால் கடுப்பான அந்தப் பெண், தானே போலீசில் புகார் அளித்தார். போலீசார், ’இதுக்கெல்லாமா வழக்கு?’ என்று அவரை திருப்பி அனுப்பிவிட்டனர். அந்த பெண் விடுவதாக இல்லை. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முறையிட்டார். அவர் மனுவை ஏற்ற நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது.

சம்மக் சல்லோ’ என்பது இந்தி வார்த்தை. இது, இந்தியாவில் பெண்ணை இழிவாகக் கூற பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு இணையான ஆங்கில வார்த்தை இல்லை. அந்த வார்த்தை எந்தப் பெண்ணுக்கும் கோபத்தை ஏற்படுத்தும். எனவே பெண்ணை ‘சம்மக் சல்லோ’ என கூறியவர் நீதிமன்றம் முடியும் வரை இங்கேயே இருந்து தண்டனையை அனுபவிக்க வேண்டும். 1 ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும்’ என்றது தீர்ப்பு. பிறகென்ன, அனுபவித்தார் சம்மக் சல்லோ பார்ட்டி.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close