[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெற்ற 15 தொகுதிகளில் 11-இல் பாஜக முன்னிலை
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் முறையீடு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா

இணையதளங்களில் திரைப்படங்கள் வெளியாகும் பிரச்னை: சர்வர்களை முடக்க கோரிக்கை

movie-released-on-websites-request-to-disable-servers

திரைப்படங்களை இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிட உதவும் அமெரிக்க சர்வர்களை முடக்க அந்நாட்டு அதிபரிடம் முறையிட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒரு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது. 

சினிமாவிற்கு எதிரானதாக விஸ்வரூபமெடுத்து வரும் 'பைரஸி' பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தயாரிப்பாளர் சங்கம் ஒரு முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. அதன்படி, அமெரிக்க அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், கையெழுத்து நடவடிக்கை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதில் 1 லட்சம் கையெழுத்துகள் பெற்று, அமெரிக்க அதிபரின் கவனம் பெற்றால், சட்டப்பூர்வமற்ற முறையில் இயங்கும் சர்வர்களை முடக்க முடியும். அதனால், செப்டம்பர் 27ம் தேதிக்குள் 1 லட்சம் கையெழுத்துகளைப் பெறத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close