[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

விஜயின் மெர்சல் படப்பெயரை இனி பயன்படுத்த முடியாது

vijay-s-mersal-title-can-no-longer-be-used

தென்னிந்திய திரையுலகில் முதன்முறையாக மெர்சல் படத்திற்கு டிரேட் மார்க் பெறப்பட்டுள்ளது. 

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தங்களுடைய 100-வது தயாரிப்பாக உருவாகி வரும் 'மெர்சல்' படத்தை பல்வேறு வகையில் விளம்பரப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் படக்குழு, தற்போது 'மெர்சல்' என்ற தலைப்புக்கு வணிகச் சின்னம் (டிரேட் மார்க்) பெற்றுள்ளது. இனி 'மெர்சல்' தலைப்பை வேறு ஏதாவது பொருளுக்கு உபயோகித்தால், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ராயல்டி செலுத்தியாக வேண்டும். தென்னிந்திய திரையுலகில் ஒரு படத்தின் பெயருக்கு வணிகச் சின்னம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்பாக  தனுஷ் அனிருத் கூட்டணியில் உருவான ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு வணிகச் சின்னம் பெற்றிருந்தனர். தென்னிந்திய படங்களில் முதல் ட்விட்டர் எமோஜி கொண்ட படம் பெயரையும் 'மெர்சல்' பெற்றுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close