[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

விவேகம் விமர்சனம்: ப்ளூசட்டைக்கு ஆதரவாக பிரபல பாடகர்!

vivegam-review-famous-singer-in-favor-of-blue-sattai

விவேகம் படம் பற்றி விமர்சனம் செய்த ப்ளூசட்டை மாறனுக்கு திரையிசை பாடகர் ஸ்ரீநிவாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

விவேகம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் ப்ளூசட்டை மாறன் என்பவர் வெளியிட்ட விமர்சனம் மிகவும் தரக்குறைவாக இருப்பதாகக் கூறி அஜித் ரசிகர்களும், திரையுலகிலரும் தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், கோலிசோடா உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் மில்டன் மாறனுக்கு எதிராக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து நடிகர் ராகவா லரன்ஸ், இயக்குநர் கெளரவ், உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலுர்ம் ப்ளூசட்டை மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ப்ளூசட்டை மாறனுக்கு ஆதரவாக பாடகர் ஸ்ரீநிவாஸ் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ப்ளூசட்டை விமர்சனம் குறித்து திரையுலகிலர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு படத்தை விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. பார்வையாளர்களை ஒரு படத்தைப் பார்க்குமாறு கட்டாயப்படுத்த முடியாது. இன்றைய சூழலில் யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். எனக்குப் பிடிக்காத படங்களை ப்ளூசட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவருடைய கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு. அவர் மற்ற படங்களை பாராட்டியும் உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close