[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
 • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
 • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
 • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
 • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
 • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
சினிமா 28 Aug, 2017 04:18 PM

பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் களமிறங்கிய ஆர்த்தி, ஜூலி!

biggboss-home-re-entry-to-arthi-and-juliana

வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களான ஜூலி, ஆர்த்தி ஆகியோர் இரண்டாவது முறையாக பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று முதல் மீண்டும் களம் இறங்கி இருக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா இருந்தபோது பல சுவாரஸ்யங்கள் நிகழ்ந்து வந்தன. அவர் வெளியேறிய பிறகு ரசிகர்கள் நிகழ்ச்சியை அவ்வளவாக ரசிக்கவில்லை. இதைத் தொடர்ந்து புதிய போட்டியாளர்களாக, சுஜா வருணி, ஹாரிஸ் கல்யாண், காஜல் பசுபதி ஆகியோரை களமிறக்கியும் அவர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களான ஜூலி, ஆர்த்தி, காயத்ரி, சக்தி, பரணி ஆகியோர் மீண்டும் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம், யார் இரண்டாவது முறையாக பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல விரும்புகிறீர்கள்? என கமல் கேட்டார்.

அப்போது தான் கண்டிப்பாக போக விரும்பவில்லை என்று ஒதுங்கி கொண்டார் காயத்ரி. இதனையடுத்து பேசிய பரணி, தனக்கு சில கமிட்மெண்ட் இருக்கிறது. அதை முடித்த பின்னரே போவது குறித்து சொல்ல முடியும் என்றார்.மூன்றவதாக பேசிய சக்தி, மீண்டும் உள்ளே செல்ல விருப்பம் இல்லை. ஆனால் அதே சமயத்தில் உள்ள சென்றால் சிலரை டிரிக்கர் செய்வேன் என என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, வீட்டுக்கு கண்டிப்பாக செல்ல விரும்புகிறேன். நாங்கள் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டில் யாரெல்லாமோ கிரகப் பிரவேஷம் செய்கிறார்கள். கயிறு வழியாக, சுவர் வழியாக சிலர் போகும்போது நான் ஏன் மீண்டும் செல்லக் கூடாது என்று அடுத்த ரவுண்டுக்கான அஸ்திவாரத்தை போடும் விதமாக ஆர்த்தி பேசினார்.

இறுதியாகப் பேசிய ஜூலி, உங்களது தங்கையாக, மக்கள் ஆசைப்பட்ட ஜல்லிக்கட்டு ஜூலியாக, மக்கள் விருப்பப்பட்டால் போகத் தயார் என்று கூறினார். இதனையடுத்து தற்போது ஜூலியும், ஆர்த்தியும் மீண்டும் உள்ள நுழைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இருவரும் இரண்டாவது முறையாக என்டரி கொடுத்த நிலையில், தற்போது இருக்கும் புதிய ஹவுஸ்மேட்ஸ் மற்றும் பழைய ஹவுஸ்மேட்ஸ் ஆகியோர் இவர்களை வரவேற்றனர்.

வீட்டுக்குள் வந்த ஜூலி ஜாலியாக பாடுவது போல் காட்டப்பட்டது. இதே போல் ஆரவ்விடம் ஏன் டல்லாக இருக்கிறீர்கள் என்று ஆர்த்தி வில்லத்தனமாக பார்த்தவாறு கேள்வி கேட்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளன.ஏற்கனவே மக்களால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களை மீண்டும் களம் இறக்கியுள்ளதன் மூலம் நிகழ்ச்சி சூடு பிடிக்குமா? டல்லடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close