[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

நட்சத்திர கிரிக்கெட்டில் அமிதாப் பச்சன், சிரஞ்சீவி?

amitabh-bachchan-chiranjeevi-to-attend-celebrity-cricket-match

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக அடுத்த மாதம் (ஏப்ரல்) 17-ந்தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன.

இதன் தொடக்க விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாசன் பங்கேற்கின்றனர். மேலும் தொடக்க விழாவில் பங்கேற்க இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மற்றும் சிரஞ்சீவிக்கும் நடிகர் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் இருவரும் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திர கிரிக்கெட்டில் மொத்தமாக 8 அணிகள் மோதுகின்றன. ஒரு அணியில் 6 நடிகர்கள் இருப்பார்கள். இதன்மூலம் எல்லா அணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 48 நடிகர்கள் விளையாடுகிறார்கள்.

இதன் ஒளிபரப்பு உரிமை ஏற்கனவே 9 கோடி ரூபாய்-க்கு விற்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close