[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்
  • BREAKING-NEWS தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS வேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன
  • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79. 24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54-ஆகவும் விற்பனை
  • BREAKING-NEWS விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே பாலி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து 28 பேர் காயம்

உணர்வுபூர்வமான காதல் கதையில் பியா!

pia-bajpai-lead-role-in-abhiyum-anuvum

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் தமிழில் அறிமுகமாகும் படம், ‘அபியும் அனுவும்’. பியா பாஜ்பாய் ஹீரோயின். சுஹாசினி, பிரபு, ரோகினி, மனோபாலா, தீபா ராமானுஜம் உட்பட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை உதயபானு மகேஸ்வரன். தரண் இசை அமைத்துள்ளார். அகிலனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். யோட்லி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.  

படத்தை இயக்கியுள்ள பி.ஆர்.விஜயலட்சுமி கூறும்போது, 'இது புதுமையான, இதுவரை சொல்லப்படாத கதை. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது வித்தியாசமான மற்றும்  துணிச்சலான படமாக இருக்கும். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காதலை இதில் கையாண்டுள்ளோம். இது சுவாரஸ்யமான திருப்பங்களுடன் உணர்வுபூர்வமான காதல் கதையாக இருக்கும். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close