[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எங்கள் பக்கம் நியாயம் இருந்ததால் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மருத்துவர்களின் சேவையை சிவப்புக் கம்பளத்துடன் வரவேற்கிறோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஆட்சி மாற்றம் விரைந்து நடக்க வியூகம் வகுப்போம் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு என தனி பேருந்தை ஏன் இயக்கக் கூடாது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
  • BREAKING-NEWS புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது
  • BREAKING-NEWS புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டம் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு அரசு மருத்துவர்கள் இரண்டு பேர் ஆஜர்
  • BREAKING-NEWS நடிகர் விஷால் கூறுவது போல் அன்புச்செழியனுக்கு அமைச்சர்கள் ஆதரவு என்பதில் எந்த உண்மையும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை: இயக்குநர் சீனுராமசாமி
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி புல்கித் என்பவர் கைது
  • BREAKING-NEWS கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை இறுதி செய்ய 2 நாளில் டெல்லி செல்கிறார் ராஜேஷ் லக்கானி
  • BREAKING-NEWS கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்ய விஷால் உத்தரவு
சினிமா 26 Aug, 2017 07:11 PM

விவேகம் பட விமர்சனம்: ராகவா லாரன்ஸ் கடும் கண்டனம்

vivegam-film-review-raghava-lawrence-s-strong-condemnation

சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான விவேகம் படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

இணையதளத்தில் சிலர் தனிப்பட்ட முறையில் படத்தைப்பற்றியும், அஜீத்தை பற்றியும் விமர்சனம் செய்தது சினிமாதுறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு திரைத்துறையினர் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கோலிசோடா உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் மில்டன், விவேகம் படம் பற்றி தரக்குறைவாகவும், தனிப்பட்ட முறையிலும்  விமர்சனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில், விவேகம் படம் பற்றி விமர்சனம் செய்ததற்கு இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில். ‘நான் விவேகம் படம் பார்த்தேன். அஜீத்தின் கடின உழைப்பிற்கு தலைவணங்குகிறேன். படம் பற்றி நல்லவிதமான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ப்ளூசட்டை மாறன் என்பவர் மோசமாகவும், மனதில் வலியை ஏற்படுத்தும் வகையிலும் விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.

விவேகம் படத்தில் பல காட்சிகள் பிரம்மாண்டமாக, ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கியுள்ளனர். படக்குழுவினரின் உழைப்பை விமர்சனம் என்கிற பெயரில் சில வார்த்தைகளில் கொச்சைப்படுத்தி விடக்கூடாது. அவரது விமர்சனம், அஜித்தையும் , அவரது ரசிகர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையில் அமைந்துள்ளது. சினிமாவையும், சினிமாதுறையினரையும் இழிவுபடுத்தும் ப்ளூசட்டை மாறன் மீது தயவு செய்து சினிமா துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்’ என தெரிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close