[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

வைரலாகும் சமந்தாவின் உடற்பயிற்சி வீடியோ!

samantha-s-exercise-video

நடிகை சமந்தா உடற்பயிற்சி மேற்கொள்ளும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது.  

திரையுலகில் அடியெடுத்து வைத்து பல ஆண்டுகளைக் கடந்த போதும் இளமையான தோற்றத்தில் காணப்படுகிறார் சமந்தா. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களை கையில் வைத்திருக்கும் அவர் பிஸியான ஷெட்யூலிலும் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோவை தனது இண்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். 

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கலோரியை குறைப்பதற்காகவே தான் உடற்பயிற்சி மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை அவர் வெளியிட்டு இருப்பது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே இது தொடர்பாக சில வீடியோக்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

தெலுங்கில் பல படங்களில் நடித்து வரும் அவர், தமிழில் சிவகார்த்திகேயனுடன் பொன்ராம் இயக்கும் ஒரு படம், விஜயுடன் மெர்சல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். வரும் அக்டோபர் 6ம் தேதி சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. 
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close