[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை யாரும் பார்க்க வேண்டாம்; திரையரங்கில் பார்க்க வேண்டும் - விஷால்
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்து படிகாயமடைந்த இசக்கிமுத்துவை சந்தித்து ஆறுதல் கூறினார் திருமாவளவன்
 • BREAKING-NEWS பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்துவிட்டார்கள்: ஹெச். ராஜா
 • BREAKING-NEWS பொருளாதார பிரச்னை குறித்து பேசுவோரை மதரீதியில் அடையாளப்படுத்துவது மோசமானது: கனிமொழி எம்.பி
 • BREAKING-NEWS சென்னையில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் விசாரணையை அக்.30ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை: ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு விளக்கம்
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
சினிமா 12 Aug, 2017 08:25 PM

சிம்பு படத்தில் பணியாற்ற விருப்பமா? உங்களைத்தான் தேடுகிறார்..!

want-to-work-in-simbu-s-film-looking-for-you

சிம்பு படத்தில் பணியாற்ற விருப்பமா? உங்களைத்தான் தேடுகிறார்..!

சிம்பு நடித்த ‘ஏஏஏ’ படம் மாபெரும் தோல்வியைத் தழுவியது. அடுத்து சிம்புவின் கைகளில் பட வாய்ப்புகள் ஏதுமில்லை. இந்நிலையில் அவர் பில்லா-3ல் நடிக்க இருப்பதாகவும், கெட்டவன் படத்தை நடித்து இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சிம்புவும் பல பரீட்சார்த்த முறைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. 
இந்நிலையில் மூன்றாவது கண் திறப்புகள் (3rdEyeOpens) என்கிற ஹேஸ்டாக்கை உருவாக்கி தனது படத்தில் பணியாற்ற விரும்புபவர்களை விண்ணப்பிக்கக் கோரி இருக்கிறார் சிம்பு. 20 முதல் 30 வயதுள்ள இளஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக்கலைஞர்கள், எழுத்தாளர் குழு, ஃபேசன் டிசைனிங் குழு, இசையமைப்பு மற்றும் ஒலிப்பதிவு குழு, எடிட்டிங்/விஎஃப்எக்ஸ்/ அனிமேசன், டிஜிட்டல் டிசைன் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கக் கோரி இருக்கிறார். அத்துடன், கலைக்குழு, கிரியேட்டிவ் குழு,  ஐடி தொழில்நுட்பக்குழு, கம்யூனிகேசன் டீம், சட்ட விவகார குழு, ரிசர்ஜ் டீம், டாகுமெண்ட் மற்றும் டைபிங், கோ-ஆர்டினேட்டர் மற்றும் மேனேஜ்மெண்ட் டீன், பைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட்ஸ் டீம் உள்ளிட்ட 15 பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கேட்டுள்ளார். 


இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சிம்பு இயக்க உள்ள ஆங்கிலப்படத்தில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. சிம்பு இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். கவுதம் மேனன் வசனம் எழுத உள்ளதாக கூறப்படுகிறது. 
விண்ணப்பிப்பவர்களுக்கு அனுபவம் இல்லாவிட்டாலும் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. சுயகுறிப்புடன், முகவரிச்சான்று, வெவ்வேறு விதமான  4 புகைப்படங்கள், சமூக வலைதள அக்கவுண்ட் பற்றிய குறிப்புகள், அனுபவ சான்றிதழ், ஏற்கனவே பணியாற்றிய குறும்படங்கள் உள்ளிட்டவற்றின் லிங்குகளை  3rdeyeopens@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கக் கோரி இருக்கிறார் சிம்பு

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close