[X] Close
JUST IN
 • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் துணை ராணுவப்படையினர் சென்ட்ரல் வந்தனர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகியிருப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - தமிழிசை
 • BREAKING-NEWS மத்திய பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு ராகுல் காந்தியே சிறந்த மாற்றுத் தலைவர் - திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 • BREAKING-NEWS குஜராத் தேர்தலில் எல்லைமீறி பாஜக பரப்புரை செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்
 • BREAKING-NEWS மீனவர்கள் மீட்காததை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் நாளை போராட்டம்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
 • BREAKING-NEWS வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,815 கனஅடியில் இருந்து 2,375 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்
 • BREAKING-NEWS இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த ரூ.75 லட்சம் கஞ்சா ராமேஸ்வரம் அருகே பறிமுதல்
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் தொடரில் வெண்கலம் வென்றது இந்திய அணி
சினிமா 11 Aug, 2017 06:23 PM

சிகிச்சைக்காக புது கெட்-அப்? ஓவியாவுக்கு என்ன ஆச்சு?

new-get-ready-for-treatment-what-happened-to-oviya

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதும், வெளியே வந்த பிறகும் ஓவியா பற்றி புதுபுதுத் தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

பிக்பாஸ் இல்லத்தில் மன அழுத்தம் ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஓவியாவுக்கு மன ரீதியாக ஓய்வு தேவை என மருத்துவர்கள் கூறிய ஆலோசனையின் பேரில் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

தற்போது அவர் ஓய்வெடுத்து வருகிறார். மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஓவியாவை அழைத்து வர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஷ்ணு விஷால் நடிக்க உள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் விஜய்-யின் அடுத்த படத்தில் ஓவியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பலரும் தங்களது படங்களில் ஓவியாவை நடிக்க வைக்க முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில், புதிய கெட்-அப்பிற்கு மாறியுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஓவியாவுக்கு புதிய ஹாலிவுட் படம் ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும், இந்த படத்தில் நடிப்பதற்காகத்தான் இந்த புதிய ஹேர்ஸ்டைலில் இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் ஓவியாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டதால் கப்பிங் தெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கப்பிங் தெரபி கொடுக்கப்பட்டவர்களுக்கு காதுக்கு மேலே ஒரு சிறிய ஆபரேஷன் செய்யப்படும். அதற்காகவே காதுக்கு மேலே உள்ள முடி அகற்றப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே ஓவியா தனக்கு பைபோலர் டிஸ்ஆர்டர் இருக்கிறது என வெளிப்படையாக கூறியிருந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close