[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழில் விஜய் நடிப்பில் ஸ்ரீதேவி நடித்து வெளியான புலி திரைப்படமே அவரின் கடைசி படமாகும்
  • BREAKING-NEWS ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழ் மற்றும் இந்தி நடிகைகள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார். 
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனும் விவாதம் தேவையில்லாதது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை
  • BREAKING-NEWS ஏப்ரல்.4ஆம் தேதி நெடுவாசல் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவு

32 குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய ஹன்சிகா!

32-hansika-celebrated-birthday-with-children

உதவி செய்வதில் வித்தியாசமான நடிகை ஹன்சிகா. சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் அவர் இதுவரை  ஆதரவற்ற 32 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து அவர்களுக்கான கல்வியையும் அளித்து வருகிறார். இந்நிலையில், தனது 27 வது பிறந்தநாளை அவர் வித்தியாசமாக கொண்டாடினார். பூஜை செய்து விட்டு தான் தத்தெடுத்த குழந்தைகளுடன் தனது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடினார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், பகிர்தலில் உள்ள மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை. சிறுவயதிலிருந்தே பகிரும் எண்ணத்தையும் பழக்கத்தையும் எனது தாயார் எனது மனதில் பதித்தார். எனக்கு கிடைத்துள்ள பரிகளையும் கேக்குகளையும் இந்த குழந்தைகளுடன் பகிர்வதில் எனக்கு கிடைக்கும் அளவற்ற சந்தோஷம் எனது பிறந்த நாளை மேலும் சிறப்பிக்கும். 'சந்தோஷமாய் இருப்பது, எளியோர்க்கு உதவுவது மற்றும் ஒழுக்கம் கடைபிடிப்பது என்ற எனது வாழ்க்கை தீர்மானத்தை இந்த வருடமும் பிறந்தநாள் தீர்மானமாக பின்பற்றவுள்ளேன்'' என்கிறார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close