[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆதார் அடையாள அட்டை செல்லும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு

விமான பைலட் ஆகும் கார்த்தி..

karthi-to-play-a-pilot-in-maniratnam-s-next

மணிரத்தினம் இயக்கும் படத்தில் நடிகர் கார்த்தி வெளிநாடு வாழ் பைலட் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுத எழுத்து படத்தில் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கார்த்தி, பருத்தி வீரன் படம் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார். இதையடுத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகராக வளம் வரும் கார்த்தி, தனது குருநாதரான மணிரத்தினத்தின் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன. அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமம் புகழ் சாய் பல்லவி நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில், மணிரத்தினம் படத்தில் வெளிநாடு வாழ் பைலட் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாகவும், வேலை தொடர்பாக இந்தியா வரும் கார்த்தி, மருத்துவரான சாய் பல்லவியைக் காதலில் விழும்படியாக கதைக் களம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்தி - சாய் பல்லவி இடையேனான காதல் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மணிரத்தினம் எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்தி தற்போது நடித்து வரும் காஷ்மோரா படத்துக்குப் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close