[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வில் சிபிஎஸ்இ மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்து கேள்விகள் கேட்கப்படும்: பிரகாஷ் ஜவடேகர்
  • BREAKING-NEWS மே மாதத்திற்குள் 2,000 புதிய பேருந்துகள் வாங்க உள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல்
  • BREAKING-NEWS பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க அரசு மானியமாக 50% வழங்கும் திட்டம் பிப்.24ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS மெரினாவில் தமிழக அரசு சார்பில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் அரசுப்பேருந்துகளில் கட்டணம் உயர்கிறது- புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்-நடிகர் கமல்ஹாசன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கமாட்டார்- தினகரன் ஆதரவாளர் புகழேந்தி
சினிமா 09 Aug, 2017 11:09 AM

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார் ஓவியா?

will-oviya-come-back-to-big-pass-home

‘நீங்க பேசாம  ஓவியா எபிசோட் எல்லாம் ரி டெலிகாஸ்ட் பண்ணினா உங்க டி.ஆர்.பி எகிற வாய்ப்புக்கள் உண்டு.’ 

’நீ என்ன குட்டிகரணம் அடிச்சாலும் ஷோ விளங்காது’

’ஏன்டா நீங்க இப்படி கலர் கலரா புருடா விட்டா மட்டும் நாங்க பிக் பாஸ் பார்த்திடுவோமா???’

’இப்போ தான் நாங்க ஷோ பாக்குறது இல்ல பின்ன  எதுக்கு தேவையில்லாம ப்ரோமோ’

’ஓவியாவ கூப்பிட்டு வராம உனக்கு என்ன ப்ரோமோ வேண்டி கிடக்கு’

’இந்த வாரம் கணேஷ் சிக்கியிருக்கான் அட போங்கடா மொக்கையா போகுது ஒவியா இல்லமா’

’உங்க டிவி பலரை வாழ வைத்தது., ஆனால், இப்போ? எங்கள் வீரபெண்சிங்கம் உங்க டிவியை வாழ வைக்கிறார்..’

’வாரம் வாரம் நல்லவங்ளா பாத்து வெளிய அனுப்பிருங்க.. கெட்ட வார்த்தை பேசறவங்க.. கட்டி புடிக்கறவங்க..கிஸ் அடிக்கறவன பாத்து வீட்டுகுள்ள வெச்சுக்கோங்க’

’ஓவியா இல்லாம ஷோ தான் மொக்கையா போகுதுனு நினைச்சேன். ப்ரோமோ கூட மொக்கையா போகுதேய்யா...’

’தலைவி ஓவியா எங்கடா..நீ பழனிக்கே நடந்து போய் ஃபிரமோ போட்டாலும்.. தலைவி இல்லாம Bigg Boss பார்க்க மாட்டோம். என்றும் தலைவி வழியில்...’’  

தனியார் தொலைக்காட்சியின் டிவிட்டர் பக்கத்தில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் ப்ரோமோவுக்கு தான் நெட்டிசன்களும், ஓவியா ஆர்மியினரும் இப்படி எதிர்வினையாற்றி இருக்கிறார்கள்.
 
ஓவியா மீதான பாசம், ஜூலி மீதான வெறுப்பு, ஜூலியை திட்டித் தீர்த்தாலும் அவர் என்ன செய்கிறார் என்பதை அறிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டியதே பிக்பாஸ் நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஓவியா, ஜூலி இருவருமே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.

ஓவியாவை வெளியேற்றியதால் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது அந்த நிகழ்ச்சியில் யாருக்கும் மக்கள் ஓட்டும் போடுவது இல்லை என்றும் கூறப்படுகிறது. ஓவியா இருந்தபோது லட்சக்கணக்கில் ஓட்டுகள் விழுந்தது. இதனால் கவலையடைந்துள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ட்விட்டர் பதிவுகள் சமூக வலைதளங்களில் ஓவியாவுக்கு இருக்கும் ஆதரவை உணர்ந்து வைல்டு கார்டு மூலம் ஓவியாவை மறுபடியும் பிக்பாஸ் வீட்டிற்குள் அழைக்கலாமா என யோசித்து வருகின்றனர்.  

இதேபோல பரணியையும் வீட்டிற்குள் அழைக்கும் திட்டமும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்து வெளியே வந்ததும், சிட்டி சென்டருக்கு சென்ற ஓவியா விமானம் மூலம் கேரளாவுக்குக் கிளம்பி இருக்கிறார். ஓவியாவின் உற்ற தோழியான நடிகை ரம்யா நம்பீசனின் வீட்டில் தற்போது ஓவியா வசித்து வரும் நிலையில், இதுவரை வெளியான அனைத்து எபிசோடுகளையும் அவர் அங்கு பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. "ஓவியா டார்லிங்... நீதான் பெஸ்ட். காயத்ரி ஒரு பச்சோந்தி" என்று காயத்ரிக்கு எதிராகவும்  ஓவியாவுக்கு ஆதரவாகவும் ட்வீட் செய்தவர் ரம்யா நம்பீசன். அவரிடமும் ஓவியாவை பிக் பாஸ் வீட்டிற்கு திரும்ப அனுப்பி வைக்க முயற்சிக்குமாறு பிக்பாஸ் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close