[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
 • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
 • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
சினிமா 09 Aug, 2017 09:04 AM

ஸ்டைலிஷ் மகேஷ்பாபு, மிரட்டல் வில்லன் எஸ்.ஜே.சூர்யா...வெளியானது டீசர் 

spyder-teaser-released

மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஸ்பைடர்’ படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ள படம் ஸ்பைடர். மகேஷ்பாபுவின் பிறந்தநாளான இன்று படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டைலிஷான தோற்றத்தில் மகேஷ்பாபு, மிரட்டலான வில்லன் கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா, வெகுளியான ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் என ‘ஸ்பைடர்’டீசர் மகேஷ்பாபு ரசிகர்களுக்கு சிறப்பான பிறந்தநாள் பரிசாக வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் மகேஷ்பாபு பேசி நடித்திருப்பது தமிழ் ரசிகர்களிடமும் ஆச்சர்யத்தையும் எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இறைவி படத்தின் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட எஸ்.ஜே.சூர்யாஸ்பைடர்’ படம் மூலம் நிச்சயம் அனைவரையும் மகிழ்விப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் தமிழில் நடித்த சில படங்கள் கைகொடுக்காத நிலையில் ‘ஸ்பைடர்’ படம்  நல்ல ஒரு ரீ-என்ட்ரியாக  அமையும் என்று நம்புகிறார்.      

டீசர் வெளியானது முதல் ரசிகர்கள் அதை சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close