[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

திட்டம் போட்டு சாதித்த டாப்ஸி!

taapsee-now-has-her-own-dream-home-in-mumbai

திட்டம் போட்டு நினைத்ததை சாதித்துவிட்டேன் என்று நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.

தமிழில் ஆடுகளம், காஞ்சனா 2, ஆரம்பம் உட்பட சில படங்களில் நடித்தவர் டாப்ஸி. இப்போது இந்திப் படங்களில் நடித்துவரும் இவருக்கு சொந்த ஊர் டெல்லி. அங்கு ஒரு வீடு இருக்கிறது. இவரது ஆசை, மும்பையில் சொந்தமாக வீடு, கார் வாங்குவதுதான். அது இப்போது நிறைவேறியிருக்கிறது.  மும்பை அந்தேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மூன்று பெட் ரூம் கொண்ட வீட்டைச் சொந்தமாக வாங்கியிருக்கிறார். இந்த வீட்டில் தன் தங்கை ஷாகுனுடன் விரைவில் குடியேறுகிறார். கிரகப்பிரவேசத்துக்காக வீட்டில் டெக்கரேஷன் வேலைகள் நடந்துவருகிறது. 
இதுபற்றி டாப்ஸி கூறும்போது, ‘2017-ல் எனது பர்த்டே வருவதற்கு முன் சொந்தமாக வீடு, கார் வாங்க வேண்டும் என நினைத்தேன். அதற்கான திட்டத்துடன் செயல்பட்டேன். சரியாக எனது பிறந்த நாளுக்கு (ஆகஸ்ட் 1) முன்பே வீட்டின் சாவி என் கைக்கு வந்துவிட்டது. காரும் சில மாதங்களுக்கு முன் கிடைத்துவிட்டது. நினைத்ததை சாதித்துவிட்டேன். எனது பர்த்டேவுக்கு நானே கொடுத்த கிப்ட் இது’ என்கிறார்
மகிழ்ச்சியாக!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close